சென்னை: பிரபல சின்னத்திரை நடிகையும் தொகுப்பாளினியுமான ஃபரீனா ஆசாத், இரண்டு வாரங்களுக்கு முன்பு சோகமாக அழுது புலம்பியபடி வீடியோ போட்டுத் தனது கணவருடன் விவாகரத்து வதந்தியைக் கிளப்பிய நிலையில், தற்போது குளியலறையில் ஆட்டம் போட்டபடி வீடியோ வெளியிட்டு இணையவாசிகளின் கடுமையான கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார்.
ஃபரீனா ஆசாத்: இரண்டு வாரங்களுக்கு முன்பு நடிகை ஃபரீனா ஆசாத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நள்ளிரவில் அழுது வடிந்தபடி இரண்டு வீடியோக்களைப் பதிவிட்டிருந்தார். அதில், ஒருத்தர்கிட்ட நீங்க பேசணும்னு நினைக்கிறீங்க... ஆனா அவரு வேலை இருக்குன்னு உங்களை அவாய்ட் பண்றாரு. இதனால் நீங்க உடைஞ்சு போவீங்க. அமைதியும் கிடைக்காது. இதுபோன்ற நபர்களை மிஸ் பண்றோம்னு நினைக்காதீங்க... உங்க வாழ்க்கையைச் சந்தோஷமா வாழுங்க சோகமான முகத்துடன் புலம்பியிருந்தார்.
வீடியோ டெலிட்: இந்தப் பதிவைப் பார்த்த ரசிகர்கள், ஃபரீனாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு வந்துவிட்டது, இருவரும் பிரிய போகிறார்கள் எனப் பதறிப்போய் கமெண்ட்டுகளில் கேள்வி கேட்கத் தொடங்கினர். ஆனால், ரசிகர்களைக் குழப்பத்தில் ஆழ்த்திய ஃபரீனா, திடீரென அந்தச் சோக வீடியோக்களை டெலீட் செய்துவிட்டு அமைதியானார்.
குளியலறையில் ஆட்டம்: விவாகரத்து வதந்தி குறித்து எந்த விளக்கமும் அளிக்காத ஃபரீனா, தற்போது கூலாகக் குளியலறையில் பாட்டுப் பாடி ஆட்டம் போட்டபடி குளிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஒரு முன்னணி பாடி லோஷன் விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், எனக்குப் பாட்டு கேட்காம, ஆட்டம் போடாம குளிக்கவே பிடிக்காது... அதேபோலத்தான் இந்த பாடி லோஷன் இல்லாமலும் குளிக்க முடியாது எனப் பேசியுள்ளார்.
கொந்தளிக்கும் நெட்டிசன்கள்: இதை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் கடுப்பாகி, என்ன ஃபரீனா இதெல்லாம்... ரெண்டு நாளுக்கு முன்னாடி புருஷனைப் பிரிஞ்சிட்ட மாதிரி அழுது வீடியோ போட்டு எல்லாரையும் புலம்ப விட்டீங்க... இப்போ விளம்பரத்துக்காக இவ்வளவு தூரம் இறங்கி பாத்ரூம் வரைக்கும் போய் வீடியோ போடுறீங்களே என அவரது கமெண்ட் பாக்ஸில் போட்டுத் தாக்கி வருகிறார்கள். தொகுப்பாளினியாக ஃபரீனா ஆசாத், விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
More Articles
- அவங்க திரும்ப வந்தாலும் எனக்கு வேண்டாம்.. நள்ளிரவில் அழுது புலம்பிய ஃபரீனா ஆசாத்!
- சீறும் அலைகளுக்கு நடுவே சக்கர ஆசனம்.. சர்வதேச யோகா தினத்தில் கடற்கரையைச் சூடேற்றிய ஃபரீனா ஆசாத்!
- என் மகன் முன் சிறிய உடையில் தான் இருப்பேன்.. அதற்குக் காரணம் இதுதான்.. பரீனா ஆசாத்!
- TVKக்கு ஓட்டு போட்டா தற்குறியா? பிறக்கும்போதே யாரும் CM இல்லை.. விஜய்க்கு ஆதரவாக பரீனா ஆசாத் பதிலடி
- வாழ்க்கையில் மறக்கமுடியாத தருணம்.. இளையராஜாவின் போட்டோவை பகிர்ந்து ஃபரினா நெகிழ்ச்சி!
- அப்போ சீரியல் லைட் ஜாக்கெட்.. இப்போ பின்புறத்தில் சிங்கம் டாட்டூ.. ஃபரீனா ஆசாத் மிரட்டுறாரே!