சென்னை: சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, பின் சீரியல்களில் கதாநாயகி, வில்லி எனப் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை மஹாலக்ஷ்மி. தனது முதல் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விவாகரத்து செய்து, மகனுடன் தனியாக வாழ்ந்து வந்தார்.

Advertisement

கடந்த 2022ஆம் ஆண்டு பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருப்பதியில் வைத்து பிரம்மாண்டமாகத் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தின் போது இணையத்தில் பலதரப்பட்ட உருவக்கேலிகளும், சர்ச்சைகளும் எழுந்தன. கல்யாணம் பண்ணினா உருவகேலி இருக்கும்னு தெரியும், அதனால உடம்பைக் குறைச்சிட்டு கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைச்சேன் என்று ரவீந்தரே பேட்டிகளில் உருக்கமாகப் பேசியிருந்தார்.

Advertisement

Photo Credit:

பிறந்தநாள் கொண்டாட்டம்: திருமணமாகி 4 ஆண்டுகளைக் கடந்து மகிழ்ச்சியான தம்பதிகளாக வாழ்ந்து வரும் இவர்கள், தனது கணவர் ரவீந்தரின் பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டாடிய மஹாலக்ஷ்மி, அதுகுறித்த புகைப்படங்களைப் பகிர்ந்து நெஞ்சைத் தொடும் காதல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். பிறந்தநாள் வாழ்த்துகள் 'அம்மு'. நீங்கள் என் கணவர் மட்டுமல்ல; என் பலம், என் அமைதி மற்றும் என் மகிழ்ச்சியான தருணங்கள் பலவற்றிற்கும் நீங்களே காரணம். உங்கள் குணநலன்களை நான் பெரிதும் மதிக்கிறேன்; உங்கள் துணையுடன் வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்வதை நான் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.

Advertisement

Photo Credit:

என் வாழ்க்கை துணையே: வாழ்க்கை நம்மை எங்கு அழைத்துச் சென்றாலும், நான் எப்போதும் உங்கள் பக்கபலமாக இருப்பேன். உங்கள் வெற்றிகளைக் கொண்டாடுவேன். ஒவ்வொரு தருணத்திலும் உங்கள் கையைப் பிடித்து உடன் வருவேன். வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு நான் உங்கள் மீது அன்பு வைத்திருக்கிறேன். பிறந்தநாள் வாழ்த்துகள் என் அன்பே... என் பாதுகாப்பான இடமே... என் வாழ்வின் துணையே என்று தன் கணவர் மீதான காதலைக் கொட்டித் தீர்த்துள்ளார் மஹாலக்ஷ்மி. மேலும், இந்த புதிய ஆண்டில் ரவீந்தருக்கு நல்ல ஆரோக்கியம், எல்லையற்ற மகிழ்ச்சி மற்றும் தொட்டதெல்லாம் துலங்கும் வெற்றி கிடைக்க வேண்டும் என்றும் அவர் இறைவனைப் பிரார்த்திப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இணையத்தில் இவர்களது புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் எப்பவுமே இதே காதலோடு சந்தோஷமா இருங்க என ரவீந்தருக்கு தங்களின் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.