இதுக்கெல்லாம் அவங்க சரிப்பட்டு வரமாட்டாங்க.. சீனியர்ஸ் உதவியை நாடிய பிக் பாஸ்!


சீனியர்ஸ் உதவியை நாடிய பிக் பாஸ்!

சென்னை: நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தைக் கூட்டுவதற்காக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சீசன் போட்டியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

கிட்டத்தட்ட பிக் பாஸ் சீசன் 2 முடியும் தருவாயில் உள்ளது. ஆனாலும், முதல் சீசனுடன் ஒப்பிடும் போது, சீசன் 2விற்கு மக்களிடையே வரவேற்பு குறைவாகவே உள்ளது.

கடந்த சீசனில் நிகழ்ச்சி முடியும் தருவாயில் நிகழ்ச்சியில் இருந்து முந்தைய வாரங்களில் வெளியேறிய போட்டியாளர்களே மீண்டும் விருந்தினர்களாக வரவழைக்கப்பட்டனர்.

சினேகன் அண்ட் கோ:

ஆனால், இந்த சீசனில் அப்படி சுவாரஸ்யமான போட்டியாளர்கள் யாரும் இல்லை. எனவே, மீண்டும் அவர்களையே களமிறக்கினால் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் கூடுவதற்கு வாய்ப்பு ஏதும் இருக்காது. இதை நன்கு உணர்ந்த பிக் பாஸ் கடந்த சீசன் போட்டியாளர்கள் சிலரை வீட்டிற்குள் விருந்தினர்களாக அனுப்பியுள்ளார்.

மக்களின் கருத்து:

பிக் பாஸின் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் அவர்களும் தற்போதைய போட்டியாளர்களை சுற்ற விட்டு வேடிக்கை காட்டுகிறார்கள். இதனால் நிகழ்ச்சி கொஞ்சம் கலகலப்பாக மாறியுள்ளது. பேசாம இவங்களையே இந்த சீசன்லயும் இந்த வீட்ல இருக்க வச்சிருக்கலாம் என்பது தான் மக்களின் கருத்தாக உள்ளது.

திட்டம்:

இந்த வாரம் முழுவதும் சினேகன் அண்ட் கோ பிக் பாஸ் வீட்டில் தான் இருக்கப் போகிறார்கள். முதல்நாளான நேற்று ஜனனி மற்றும் மும்தாஜை வைத்து அவர்கள் விளையாடியது நன்றாக இருந்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியாளராக வைத்து செய்ய அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

ஆர்த்தி:

ஆர்த்தியின் காமெடி ரசிக்கும்படி உள்ளது. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல், போட்டியாளர்களிடம் மக்கள் கேட்க விரும்பும் கேள்விகளை சிரித்துக் கொண்டே ஆர்த்தி கேட்பது சூப்பர். அவ்வப்போது போட்டியாளர்களுக்கு தவறாமல் அட்வைஸ் தருவது தான் கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்துகிறது. அதைக் குறைத்துக் கொண்டால் இன்னும் நன்றாக இருக்கும்.

Read More About: snehan harathi janani mumtaj

Have a great day!
Read more...

English Summary

In Bigg boss 2 tamil, season one contestants entered the house to make the program more interesting.