அய்யய்யோ விஜிக்கு என்னமோ ஆச்சு: டாக்டரை கூப்பிடுங்க பிக் பாஸ்


சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருக்கும் விஜயலட்சுமிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

பிக் பாஸ் 2 வீட்டில் உள்ள போட்டியாளர்களும், விருந்தினர்களும் சேர்ந்து டாஸ்க் செய்தபோது விபரீதமாகிவிட்டது. டாஸ்கின்போது பாலாஜி விஜயலட்சுமி மீது மோதி கீழே விழுந்தார்.

இதில் விஜயலட்சுமிக்கு கழுத்தில் அடிபட்டுள்ளது.

ப்ரொமோ

விஜி

கழுத்தை பிடித்துக் கொண்டு விஜயலட்சுமி அழும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. பின்னர் விஜி தரையில் படுத்திருக்கிறார். அவர் சும்மா கண்ணை மூடியுள்ளாரா, இல்லை மயக்கமாகிவிட்டாரா என்று தெரியவில்லை.

மும்தாஜ்

அழுகை

மும்தாஜ் குமுறிக் குமுறி அழும் மற்றொரு ப்ரொமோ வீடியோவும் வெளியாகியுள்ளது. அழுத மும்தாஜை பார்த்த சினேகன் கட்டிப்பிடி வைத்தியம் செய்ய அருகில் சென்றார். பின்பு என்ன நினைத்தாரோ தோளில் மட்டும் கையை போட்டார்.

கமல்

சினேகன்

கமல் சார் வரும் போது சிலர் மரியாதை இல்லாமல் கால் மீது கால் போட்டு பேசுவது எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்கவில்லை என்கிறார் சினேகன். அவர் உங்களை திட்டிவிட்டு இந்த திரை மூடிய பிறகு எவ்வளவு ஃபீல் பண்ணுவார் தெரியுமா என்று சினேகன் மேலும் தெரிவித்த வீடியோவும் வெளியாகியுள்ளது.

காப்பியா?

ஜூலி

ஜூலி

கடந்த சீசனில் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது ஜூலி வாந்தி எடுத்தது போன்று சீன் வைத்தார்கள். அதே போன்று தான் விஜியுமா? என்ற சந்தேகம் எழாமல் இல்லை. இன்று இரவு நிகழ்ச்சியை பார்த்தால் தான் உண்மை தெரியும். ஹய்யோ, அந்த மனுஷனை விட பிக் பாஸ் அநியாயத்திற்கு காப்பியடிக்கிறாரே!

Have a great day!
Read more...

English Summary

According to a promo video released today, Bigg Boss 2 Tamil contestant Vijayalakshmi has got hurt while doing a task.