அய்யோ பாவம், பிக் பாஸில் கலந்து கொண்ட பின் காயத்ரிக்கு இப்படி ஒரு பிரச்சனையா?


பிக் பாஸ் கலந்து கொண்டது பிறகு கோபம் வருகிறது : காயத்ரி- வீடியோ

சென்னை: அய்யோ பாவம், பிக் பாஸில் கலந்து கொண்ட பின் காயத்ரிக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

காய்தரி ரகுராம் தற்போது விருந்தினராக பிக் பாஸ் 2 வீட்டிற்குள் சென்றுள்ளார். முதல் சீசனில் அவர் கோபப்பட்டதை பார்த்த பார்வையாளர்கள் தற்போது வரை அவரை சமூக வலைதளங்களில் திட்டித் தீர்க்கிறார்கள்.

இதை பார்த்து அவர் பல முறை கோபப்பட்டு பதில் அளித்துள்ளார்.

மாட்டேன்

பிக் பாஸ் வீட்டிற்கு மீண்டும் அழைத்தால் செல்ல மாட்டேன் என்று காயத்ரி ரகுராம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் விருந்தினராக சென்றிருப்பதை பார்த்த பார்வையாளர்கள் போக மாட்டேன்னு சொன்னீங்க போயிட்டீங்களே என்று கலாய்க்கிறார்கள். ஆனால் ஐஸ்வர்யாவை பார்த்த பிறகு காயத்ரி மீதான கோபம் பார்வையாளர்களுக்கு வெகுவாக குறைந்துவிட்டது என்றே கூற வேண்டும்.

ஹைஹீல்ஸ்

நேற்று கால் பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் சிம்புவின் போட்டுத்தாக்கு பாட்டுக்கு சூப்பராக டான்ஸ் ஆட இந்த மும்தாஜ் மட்டும் முகத்தை மூடிக் கொண்டு தூங்கினார். பின்னர் அங்கு வந்த காயத்ரி மும்தாஜ் வைத்திருக்கும் ஹை ஹீல்ஸை பார்த்துவிட்டு உங்களின் பிரச்சனைக்கு இதை எல்லாம் நீங்க போடக் கூடாதே என்றார். எனக்கு முழங்காலில் பிரச்சனை இல்லை இடுப்பில் தான் என்று விளக்கம் அளித்தார் மும்தாஜ். இடுப்பு பிரச்சனையாக இருந்தாலும் ஹீல்ஸ் போடக் கூடாது என்றார் காயத்ரி. எப்ப இந்த காயத்ரி கிளம்புவார் என்பது போன்று ஒரு லுக் விட்டார் மும்தாஜ்.

அழுத்தம்

வீட்டில் இருக்கும் அனைவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு நடந்தால் நன்றாக இருக்கும். இல்லை என்றால் ஸ்ரெஸ்ஸால் உங்களால் எதுவுமே பண்ண முடியாமல் போய்விடும் என்று காயத்ரி அறிவுரை வழங்கினார். அவரின் அறிவுரையை பார்த்த பார்வையாளர்கள் நீங்கள் முதல் சீசனில் இப்படித் தான் புரிந்து கொண்டு நடந்தீர்களா என்று கேட்கிறார்கள்.

கோபம்

ஆர்த்தி தன் கையில் ருத்ராட்சை அணிந்திருப்பதை பார்த்த ஐஸ்வர்யா மகத் இப்படித் தான் அணிந்திருந்தான் என்றார். அப்ப ஏன் மகத்துக்கு அவ்வளவு கோபம் வந்தது. ருத்ராட்சை அணிந்தால் கோபம் வெகுவாக குறைந்துவிடும் என்றார் ஆர்த்தி. இதை கேட்ட காயத்ரியோ அப்படி என்றால் நானும் ஒன்று அணிய வேண்டும். பிக் பாஸ் வீட்டில் இருந்து கிளம்பிச் சென்ற பிறகு கோபம் அதிகமாக வருகிறது என்றார்.

Have a great day!
Read more...

English Summary

Former contestant Gayathri Raghuram said that she has become very short tempered after participating in Bigg Boss TV show.