பாலாஜியை பார்த்து நறுக்குன்னு ஒரு கேள்வி கேட்ட ஆர்த்தி: என்ன கேள்வி தெரியுமா?


பாலாஜியை பார்த்து நறுக்குன்னு ஒரு கேள்வி கேட்ட ஆர்த்தி- வீடியோ

சென்னை: பிக் பாஸ் 2 வீட்டிற்கு விருந்தினராக வந்துள்ள ஆர்த்தி தாடி பாலாஜியை பார்த்து நச்சுன்னு ஒரு கேள்வி கேட்டார்.

பிக் பாஸ் 2 வீட்டில் ஆட்கள் குறைவானதாலும், சுவாரஸ்யம் இல்லாததாலும் முன்னாள் போட்டியாளர்களான சினேகன், வையாபுரி, காயத்ரி ரகுராம், ஆர்த்தி, சுஜா வருணி ஆகியோரை அழைத்து வந்துள்ளனர்.

அவர்கள் ஒரு வார காலம் பிக் பாஸ் வீட்டில் தங்கியிருப்பார்களாம்.

கடுப்பு

பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தினர்களின் செயல்களால் மும்தாஜ் தான் கடுப்பாகிக் கொண்டிருக்கிறார். எதுக்கு வம்பு, அவர்கள் கிளம்பும் வரை இருக்கும் இடம் தெரியாமல் இருந்துவிடுவோம் என்ற முடிவில் உள்ளார் ஐஸ்வர்யா. ஐஸ்வர்யாவின் அமைதியே சந்தேகத்தை கிளப்புகிறது. இந்த விருந்தினர் நாடகமே ஐஸ்வர்யாவை காப்பாற்றவா என்று தோன்றுகிறது.

பாலாஜி

சர்வாதிகாரி டாஸ்கின் போது ஐஸ்வர்யா பேயாட்டம் ஆடி தாடி பாலாஜி மீது குப்பையை கொட்டினார். அதற்காக அவரின் அம்மா வந்து இந்தியில் மன்னிப்பு கேட்டது தனிக் கதை. இந்நிலையில் ஆர்த்தி தாடி பாலாஜியை பார்த்து சூப்பராக ஒரு கேள்வி கேட்டார். அவர் கேட்ட அதே கேள்வியை தான் பார்வையாளர்களும் கேட்க விரும்பினார்கள்.

நித்யா

ஐஸ்வர்யா குப்பையை கொட்டியபோது அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அமைதியாக இருந்தீர்களே, இதுவே நித்யா அக்கா செய்திருந்தால் சும்மா இருப்பீங்களா?. நித்யா செய்தால் கத்துவீங்க, ஏன் என்றால் உரிமை உள்ளது. ஐஸ்வர்யா செய்தால் பேசாமல் இருப்பீங்க. இங்கு வந்ததற்கு வீட்டிலேயே இருந்திருக்கலாம் என்று தோன்றியிருக்குமே என்று சூப்பராக சொன்னார் ஆர்த்தி.

மனமாற்றம்

நித்யா பிக் பாஸ் வீட்டில் இருந்த போது அவருடன் அடிக்கடி மோதினார் பாலாஜி. விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்ற நித்யாவுடன் மீண்டும் சேர ஆசைப்பட்டு வந்துள்ளதாக கூறிவிட்டு அவரை அழ வைத்து வேடிக்கை பார்த்தார். நித்யா விவாகரத்து முடிவில் இருந்து மாறவில்லை என்று கூறப்படுகிறது. இது தெரியாமல் வெளியே போனால் நித்யாவுடன் சேர்ந்துவிடலாம் என்று நினைக்கிறார் பாலாஜி.

Have a great day!
Read more...

English Summary

Harathi has asked Balaji whether he would have kept quiet if his wife Nithya dumped waste on him.