சென்னை: பிக் பாஸ், குக் வித் கோமாளி என விதவிதமான கான்செப்ட்களை இறக்கி டிஆர்பி-யை அள்ளுவதில் விஜய் டிவி எப்போதுமே கில்லாடி. அந்த வரிசையில், தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் புயலையே கிளப்பியுள்ள ஒரு புதுமையான, அதே நேரம் சர்ச்சையான ரியாலிட்டி ஷோவை விஜய் டிவி களம் இறக்குகிறது. அதுதான் 'செகண்ட் லவ்'.
செகண்ட் லவ்: இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமே முதல் காதலில் விழுந்து, பிரேக் அப் ஆகி, மனவேதனையிலும் ஏமாற்றத்திலும் நொந்து நூடுல்ஸ் ஆகி நிற்பவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அழைத்து வருவதுதான் இந்த ஷோவின் முதல் வேலை. பிரேக்-அப் ஆன 6 ஆண்களும், 6 பெண்கள் என மொத்தம் 12 பேர் ஒரே வீட்டிற்குள் தங்க வைக்கப்படுவார்கள். அவர்களுக்குள் மீண்டும் காதலை துளிர்க்க வைக்கப் பல சுவாரசியமான டாஸ்க்குகள் கொடுக்கப்படும். இந்த பயணத்தின் முடிவில், யாருக்கு யார் மீது காதல் வருகிறதோ, அவர்கள் அங்கிருக்கும் மோதிரத்தை மாற்றிக்கொண்டு நிஜ வாழ்க்கையிலும் தங்களது காதலைத் தொடரலாம்.
என்ன கன்றாவி ஷோ: இந்த அதிரடி காதலாட்டத்திற்கு நடுவராக வழங்க ரம்யா கிருஷ்ணன் இருக்கிறார். ஜூலை 13-ஆம் தேதி முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும், வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விஜய் தொலைக்காட்சியிலும் இந்த நிகழ்ச்சியை பார்க்கலாம். இந்த நிகழ்ச்சியின் முதல் புரோமோ வெளியானதுமே கடுப்பான இணையவாசிகள் தங்களது விமர்சனக் கணைகளைத் தொடுக்க ஆரம்பித்துவிட்டனர். இது என்ன செகண்ட் மேரேஜுக்கு ஆள் பிடிக்கும் மேட்ரிமோனி ஷோ மாதிரி இருக்கு? என்றும் இதெல்லாம் நம்ம ஊர் கலாச்சாரத்துக்கு செட் ஆகுமா?, விஜய் டிவி அடுத்தவங்க பிரேக்-அப்-ஐ வச்சு காசு பாக்குதா? எனப் பலரும் காரசாரமாகத் திட்டித் தீர்த்து வருகின்றனர். எவ்வளவு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் அதையே தங்களுக்குச் சாதகமான விளம்பரமாக மாற்றி, கல்லா கட்டுவதில் விஜய் டிவி எப்போதுமே பிஸ்தா தான். பிக் பாஸ் பாணியில் இந்த 'செகண்ட் லவ்' ஷோவிற்கும் பயங்கர பில்டப் கொடுத்து, இந்த ஆண்டின் மிகப்பெரிய ஹிட் ஷோவாக மாற்ற விஜய் டிவி இப்போதே ரகசிய பிளான்களைப் போட்டு பணத்தை அள்ளத் தயாராகிவிட்டது.
More Articles
- Bigg Boss Tamil 10: பிக் பாஸ் தமிழ் சீசன் 10.. கிராண்ட் லான்ச் எப்போ தெரியுமா?.. ஏகப்பட்ட ஸ்பெஷல்!
- விஜய் TV 18+ சர்டிஃபிகேட் வாங்கிட்டாங்களா? Second Love ப்ரோமோவால் வந்த விவாதம்.. உண்மை என்ன?
- Second Love ப்ரோமோவை இறக்கிய விஜய் டிவி.. வெச்சு விளாசிய நெட்டிசன்ஸ்.. என்ன கான்செப்ட்டு இது?
- பிக் பாஸ் பிரபலம் ’விக்கல்ஸ்’ விக்ரம் ஹீரோவாக நடிக்கும் படம் என்ன ஆச்சு?.. சூடான அப்டேட் இதோ!
- கடின உழைப்புக்குக் கிடைத்த பரிசு.. புது வீட்டுக்குக் குடியேறிய விஜய் டிவி தங்கதுரை!
- ச்சீ.. கன்றாவி.. உதட்டில் முத்தமா? உங்களுக்கு என்ன பிரச்சனை? சீரியல் நடிகை பதிலடி!