சென்னை: நாதஸ்வரம் சீரியல் மூலம் அறிமுகமான நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா. அந்த சீரியலைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து பிரபலமானவ இவர், அரவிந்த் சேகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமான ஒரு வருடத்திலேயே அரவிந்த் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரின் நினைவில் இருக்கும் ஸ்ருதி சண்முகப்பிரியா இரண்டாவது திருமணம் குறித்து பேசி உள்ளார்.

Advertisement

நடிகை ஸ்ருதி சண்முகப்ரியாவிற்கும் அரவிந்த் சேகருக்கு கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் நடந்தது. பார்க்கவே கண் படும் அளவிற்கு மிகவும் பொருத்தமாக ஜோடியாக இந்த தம்பதியனிர் வாழ்க்கையை தொடங்கினார்கள். ஆனால், விதியின் சதியால் திருமணம் முடிந்த ஒரே ஆண்டிலேயே அரவிந்த் மாரடைப்பால் திடீரென உயிரிழந்தார். இந்தச் சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Advertisement

Photo Credit:

ஸ்ருதி சண்முகப்பிரியா: உயிரோடதான் இருக்கான்: கணவர் மறைந்து இத்தனை காலம் ஆகியும் இன்னமும் அவரின் நினைவுகளோடு வாழ்ந்து வரும் ஸ்ருதி, அண்மையில் அளித்த பேட்டியில் பல விஷயத்தை பேசி உள்ளார். எனக்கு எல்லாமே அவன் தான். அரவிந்த் இப்போது என் அருகே உயிரோடு இல்லை என்றாலும், அவனது நண்பர்களிடம் பேசும் போதும், நான் தனியாக இருக்கும் போதும் அவனைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டும், நினைத்துக் கொண்டும்தான் இருக்கிறேன். நான் நினைக்க நினைக்க அவனுடைய நினைவுகள் எப்போதும் என்னுடன் தான் இருக்கும். அவன் இன்னமும் என்னுடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறான்.

Advertisement

2-வது திருமணம்?: என்னுடைய அம்மா, அப்பா மற்றும் அரவிந்தின் பெற்றோர் கூட என்னை இன்னொரு திருமணம் செய்து கொள் எனத் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். என் தோழிகளும் நலம் விரும்பிகளும் நீ இப்படித் தனிமையில் கஷ்டப்படுவதை அரவிந்த் நிச்சயமாக விரும்ப மாட்டான் என்று சொல்கிறார்கள். ஆனால், தனியாக வாழ்வதோ அல்லது மறுமணம் செய்து கொள்வதோ அவரவர் விருப்பம். ஒருவேளை வருங்காலத்தில் எனக்கு ஒருவரைப் பிடித்து நான் திருமணம் செய்து கொண்டால் கூட, அந்த நபரை எனக்கு அனுப்பி வைத்தது என்னை பாதுகாக்கும் என் தேவதையான என் கணவர் அரவிந்தாகத்தான் இருக்கும் என ஸ்ருதி சண்முகப்பிரியா பேசி உள்ளார். இந்த பேட்டியை பார்த்த பலர், அவருக்கு ஆறுதல்களை கூறி வருகின்றனர்.