சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் "கட்டுனா பிரசாந்தைத் தான் கட்டுவேன்" என்று தமிழ்நாட்டுப் பெண்கள் எல்லாம் போட்டிப் போட்டுக் கொண்டு உருகும் அளவிற்கு, சாக்லேட் பாய் லுக்கில் பேரழகனாக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். அவர் தேர்ந்தெடுத்து நடித்த அத்தனை திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து மாஸ் காட்டின.

Advertisement

நடிகர் பிரசாந்த்: ஆனால், சில தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்சினைகள் காரணமாகச் சினிமாவில் இருந்து சில காலம் ஒதுங்கியிருந்த பிரசாந்த், அண்மையில் வெளியான 'அந்தகன்' திரைப்படத்தில் பார்வையற்றவராக நடித்து கம்பேக் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான 'கோட்' திரைப்படத்திலும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரம்மாண்ட நடன ரியாலிட்டி ஷோவில் நடிகைகள் சிம்ரன் மற்றும் சினேகா ஆகியோருடன் இணைந்து நடுவராக இருக்கிறார்.

Advertisement

Photo Credit:

விரும்புகிறேன் பட ரகசியம்: இந்த நிகழ்ச்சியின் போது, நடிகை சினேகா பிரசாந்துடன் தான் இணைந்து நடித்த 'விரும்புகிறேன்' திரைப்படத்தில் நடந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தை பகிர்ந்து கொண்டார். அதாவது விரும்புகிறேன் படத்தில் 'இளவட்டக் கல்லை' தூக்கிப் போடுவது போல ஒரு மாஸ் சீன் வரும். தியேட்டரில் அந்த காட்சியைப் பார்த்த அத்தனை பேரும், அது சும்மா டூப்ளிகேட் கல் என்று தான் நினைத்து இருப்பீர்கள். ஆனால், அது உண்மையான கல். அந்த ஒரே ஒரு காட்சிக்காகவே பிரசாந்த் பலமுறை கடுமையான பயிற்சிகளை எடுத்துக்கொண்டு, தத்ரூபமாக அந்த நிஜக் கல்லைத் தூக்கினார். அது அவ்வளவு சாதாரணமான விஷயம் கிடையாது. ஏனெனில், அந்தக் கல்லின் எடை மட்டும்130 கிலோ இருக்கும் என்று சினேகா சொன்னார். இதைக் கேட்டு அரங்கத்தில் இருந்த சக நடுவர்களான சிம்ரன் மற்றும் ஒட்டுமொத்த ரசிகர்களும் வியந்து போய் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

Advertisement

Photo Credit:

விரும்புகிறேன்: கடந்த 2002-ஆம் ஆண்டு சுசி கணேசன் இயக்கத்தில் வெளியான 'விரும்புகிறேன்' திரைப்படத்தில் பிரசாந்த், சினேகா, நாசர், ஈஸ்வரி ராவ், லிவிங்ஸ்டன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படத்தில் பிரசாந்த் ஒரு தீயணைப்பு வீரராக நடித்திருப்பார். இப்படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் இன்று வரை ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரிட் மெலடிகளாக ஒலித்து வருகின்றன.