சென்னை: சன் தொலைக்காட்சியின் திங்கள் முதல் ஞாயிறு வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மெகா ஹிட் சீரியல் எதிர்நீச்சல் தொடர்கிறது. இல்லத்தரசிகளுக்கு மிகவும் பிடித்தமான சீரியல்களில் ஒன்றயாக இத்தொடர் உள்ளது. இதில், முதன்மை கதாபாத்திரத்தில் 'ஜனனி' என்ற கெத்தான ரோலில் நடித்து வரும் நடிகை பார்வதி, தற்போது வெளியிட்டுள்ள மாடர்ன் புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன. சீரியலில் எப்போதும் சேலையிலும் குடும்பப் பெண்ணாகவும் பார்க்கும் ரசிகர்கள், இவரின் இந்த ஸ்டைலிஷ் அவதாரத்தைப் பார்த்து சொக்கிப் போய் வீழ்ந்துள்ளனர்.

Advertisement

எதிர்நீச்சல் தொடர்கிறது: நான்கு மருமகள்களின் உரிமையையும் வாழ்க்கையையும் மையமாகக் கொண்டு உருவாகி, முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இரண்டாவது பாகம் எதிர்நீச்சல் தொடர்கிறது என விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. பெண்களை வீட்டிற்குள் அடக்கி ஆள நினைக்கும் ஆணாதிக்கக் குணசேகரனை எதிர்த்தும், அக்குடும்பத்தையே அழிக்கத் துடிக்கும் புது எதிரியான ராவணனிடம் இருந்தும் குடும்பத்தைக் காப்பாற்றப் போராடும் 'ஜனனி' கதாபாத்திரத்தில் மிக அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் பார்வதி. தற்போது சீரியலில் கர்ப்பமாக இருக்கும் சூழலிலும், குடும்பப் பிரச்சனைகளைத் துணிச்சலாக எதிர்கொண்டு வருவது போல சீரியலின் கதைக்களம் செல்கிறது.

Advertisement

Photo Credit:

குத்த வச்சு உட்கார்ந்து: சீரியலில் எப்போதும் பிரச்சனைகளுடனும் போராட்டங்களுடனும் வலம் வரும் பார்வதி, நிஜ வாழ்க்கையில் படு ஜாலியான மற்றும் ஸ்டைலிஷான நபராகச் சோஷியல் மீடியாவில் வலம் வருகிறார். தற்போது, பார்வதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள போட்டோவில், லைட் பிங்க் நிற டாப்ஸ் மற்றும் லூஸ் ஃபிட் பேன்ட் அணிந்து, மர நாற்காலியில் குத்தவைத்து உட்கார்ந்து அழகாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் கையிலுள்ள நட்சத்திர டாட்டூவும், காலில் கொலுசும் அவரின் அழகுக்கு கூடுதல் அழகு சேர்த்துள்ளது.

டிரெண்டாகும் இந்த போட்டோபை பார்த்த ஃபேன்ஸ், அடடே... சீரியலில் பார்க்கும் ஜனனியா இது?, என்ன அழகுடா சாமி, குத்த வச்சு உட்கார்ந்து இருக்கறதுல கூட தனி கெத்துதான் என கமெண்ட்களைக் குவித்து லைக்ஸ்களை அள்ளி வீசி வருகின்றனர்.