சென்னை: இன்றைய எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோடில், தர்ஷினி அறைக்குள் இருப்பதை பார்த்த குணசேகரன், அவரை ஹாலுக்கு அழைத்து வருகிறார். அப்போது அங்கு இருந்த ராவணனை காட்டி, "உன்னை காப்பாற்றியது இவர்தான். இவர் மட்டும் இல்லையென்றால் உன் நிலைமை மோசமாகியிருக்கும். உன்னை யாரோ ஒருவன் சுடப்பார்த்தான் அவனிடம் இருந்து காப்பாற்றியது இவர் தான் என்கிறார். அந்த நேரத்தில் ஜனனி குறுக்கிட்டு, சுட்டது மட்டுமல்ல... சுட்டது யார் என்பதும் தர்ஷினிக்கு தெரியும் என்று கூறியதும், ராவணன் அதிர்ச்சியடைந்து பதற்றமடைகிறார். உடனே தர்ஷினியிடம், உன்னை சுட்டது யாருன்னு தெரியுமா? சொல்லு... என்று தொடர்ந்து அழுத்தம் கொடுக்கிறார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது: அப்போது ஜனனி, அவளை ஏன் இவ்வளவு டென்ஷன் பண்றீங்க? அவளே கொஞ்சம் அமைதியாக யோசித்து சொல்லட்டும் என்று தடுக்கிறார். ஆனால் தர்ஷினி, நான் பார்க்கவில்லை என்பதுபோல் தலையசைக்கிறார். இதையடுத்து கதிர், உடம்பு சரியில்லாத அந்த பொண்ணை இவ்வளவு கஷ்டப்படுத்தி, இப்போ பழியை வேற யார்மேலாவது போடப் பார்க்கிறீங்களா? என்று குணசேகரனிடம் கேள்வி எழுப்புகிறார். அதற்கு ஜனனி, நான் யார் மீதும் பழி போடவில்லை. ஆனால் உண்மை என்ன என்பது இந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் மிக விரைவில் தெரியும் என்று சொல்விட்டு, சக்தியிடம் வெளியே செல்லச் சொல்கிறார். சக்தி வெளியே சென்றவுடன் பதற்றமடைந்த ராவணன், லட்சுமணனுக்கு போன் செய்து, ஜனனிக்கு ஏதோ விஷயம் தெரிந்திருக்கு. அவள் இன்று பேசியது எல்லாமே வித்தியாசமாக இருந்தது. அதோடு சக்தியும் வெளியே போயிருக்கான். அவன் எங்கே போகிறான் என்று பின்தொடர்ந்து பாருங்கள் என்கிறார்.
அதிர்ச்சியில் ராவணன்: இதற்கிடையில் வெளியே வரும் குணசேகரனும், ஜனனியும் சக்தியும் சாதாரணமாக இல்லை. வி.கே-வை சுட்ட விஷயம் சக்திக்கு தெரிந்தால் பெரிய பிரச்சனை வரும். அதனால் சக்தி எங்கே செல்கிறான் என்று கண்காணியுங்கள் என்று கூறுகிறார். ஆனால், நல்லவன் போல நடிக்கும் ராவணன், ஜனனி உண்மையை கண்டுபிடித்தால், நான் ஜெயிலுக்குப் போகவும் தயாராக இருக்கிறேன் என்கிறார். அதற்கு குணசேகரன், எங்கள் குடும்ப விஷயத்துக்காக நீங்கள் ஜெயிலுக்கு போகக் கூடாது என்று அவரை சமாதானப்படுத்துகிறார்.
மறுபுறம் ஜனனி, சக்திக்கு போன் செய்து, ராவணனை ஏமாற்றத்தான் நீ வெளியே போனே. ஜாக்கிரதையாக இரு. வி.கே-வை பார்க்க போகாதே என்கிறாள்.அப்போது சக்தி, எப்படி எல்லாவற்றுக்கும் ராவணன் தான் காரணம் என்று நினைக்க முடியும்? என்று கேட்கிறார். உடனே ஜனனி, நம்ம இருந்த இடம் ராவணனுக்கு எப்படி தெரிந்தது? வி.கேவிற்கு தான் எல்லாம் தெரியும், அவன் கண் திறந்தால் எல்லா உண்மைகளும் வெளிவரும் என்கிறார். இந்த பரபரப்பான திருப்பத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது.
More Articles
- குணசேகரனை வாயடைக்க வைத்த ரேணுகா-நந்தினி.. எதிர்நீச்சல் தொடர்கிறது அதிரடி ட்விஸ்ட்!
- காணாமல் போன விக்கியின் உடல்.. நடுநடுங்கிப் போன ராணா.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
- போலீஸை எதிர்த்து நின்ற சக்தி.. மயக்கத்திலேயே இருக்கும் தர்ஷினி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
- மாட்டிப்பாரா ராணா? போலீஸையே திருப்பி அனுப்பிய ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
- தர்ஷினியை கடத்துனது இந்த ராணாதான்.. குணசேகரன் முன்னாடியே உண்மையை உடைத்த ஜனனி!
- தர்ஷினியை வீட்டுக்கு அழைத்து வந்த ராவணன்.. அதிர்ச்சியில் ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!