சென்னை: இன்றைய எதிர்நீச்சல் எபிசோடில் நந்தினி மற்றும் ரேணுகா இருவரும் கதிர், ஞானம் ஆகியோரை தனியாக அழைத்துப் பேசுகின்றனர். அப்போது, நீங்கள் கேட்ட டாக்குமெண்ட்ஸ் எல்லாத்தையும் ராணா கொடுத்துட்டாரு. இதுக்கு மேலயாவது எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்க என கேட்கின்றனர். உடனே, நந்தினி, இனிமேல அந்த ராவணன் பிசினஸ் விஷயத்தில் தலையிட மாட்டாரா? இந்த வீட்டுக்கு வரமாட்டாரா?என்று கேட்கிறார். அதற்கு ஞானம், என்னமா நந்தினி கொஞ்சமாவது எங்களைப் புரிஞ்சுக்கோம்மா. அண்ணா ராவணன் பேச்சை முழுசாக நம்புறாரு. அதனால இப்போதைக்கு வேற வழி இல்லை. நம்ம பிசினஸ் நல்லா செட்டாகி நம்ம கால்ல நாம நிக்க ஆரம்பிச்ச பிறகு அவனை விட்டு விலகிடலாம். எங்களுக்கும் அவனோட சேர்ந்து இருக்க விருப்பம் இல்லை என்று எடுத்து சொல்லி நந்தினி, ரேணுகாவை சமாதானப்படுத்துகிறார்.

Advertisement

Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: மறுபக்கம், வி.கே. இருக்கும் இடத்திற்கு வந்து ஒரு டாக்டரை பார்த்து பேசுகிறார். அப்போது அந்த டாக்டர், வி.கே.விற்கு இன்னும் நினைவு திரும்பவில்லை, இதற்கு மேல் இவரை இங்கு வைத்து இருப்பது கஷ்டம் என்கிறார். உடனே சக்தி, விகேவை இங்கு இருந்து இடம் மாற்றுவதற்கான ஏற்பாட்டை செய்கிறேன் டாக்டர், நீங்க செய்த உதவியை நான் மறக்கவே மாட்டேன் என்கிறார். உடனே அந்த டாக்டர்,ஜீவானந்தம் எனக்கு நன்றாகத் தெரியும். சமூகத்துக்காக உயிரையே பணயம் வைத்து போராடியவர். அவருக்காகத்தான் நான் உங்களுக்கு உதவி செய்கிறேன். அவர் உங்களைப் பற்றியும், ஜனனி பற்றியும் நிறைய சொல்லியிருக்கிறார் என்றார். மேலும், இந்த விகே கண் திறந்தால் தான் எல்லாத்தையும் விசாரிக்க முடியும் என்கிறார். விகேவின் உடலில் ஏதாவது மாற்றம் தெரிந்தால் உடனே போன் செய்கிறேன் என்று டாக்டர் சொல்ல, சக்தி அங்கிருந்து வெளியே வந்து ஜனனியிடம் தகவலை தெரிவிக்கிறார். இதைக் கேட்ட ஜனனி, இதை போன்ல பேச வேண்டாம். நீங்க முதல்ல வீட்டுக்கு வாங்க பேசலாம் என்கிறாள்.

Advertisement

விசாலாட்சி அதிரடி: மறுபக்கம் குணசேகரன் வீட்டில், ஈஸ்வரி ஞானம் மற்றும் கதிரிடம், நீங்க பிசினஸ் ஆரம்பிக்கிறது நல்ல விஷயம் தான். வெளியில இருக்கிறவங்களை கூப்பிடுறதுக்கு முன்னாடி உங்க அம்மாவை கூப்பிடுங்க. அவங்க வரலன்னாலும் பரவாயில்லை. ஆனா அழைக்க வேண்டியது உங்க பொறுப்பு என்று சொல்ல, ஞானமும் கதிரும் சேர்ந்து விசாலாட்சியிடம், நாங்க புது பிசினஸ் ஆரம்பிக்கப் போறோம், அதற்கான திறப்புவிழாவிற்கு வந்துவிடுங்கள் என்று அழைக்கிறார். ஆனால், விசாலாட்சி அதிரடியாக, அன்னைக்கு கையெழுத்து போடாததால இந்த வீட்டுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு சொன்னது நீங்கதானே? இப்ப மட்டும் எதுக்கு கூப்பிடுறீங்க? என்று கேள்வி எழுப்புகிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.