சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது நேற்றைய எபிசோடில், குணசேகரன் வீட்டிற்கு ஜோசியர் ஒருவர் வருகிறார். அவரைப் பார்த்த ராவணன், ஜோசியத்தில் எனக்கு நம்பிக்கையே இல்லை. இதையெல்லாம் ஏன் நம்புகிறீர்க, என்று கேட்கிறார். ஆனால் ஜோசியர் அதற்குத் தகுந்த விளக்கம் கொடுக்கிறார். அதன் பின், குணசேகரன் அம்மா, விஷாலாட்சியிடம் சக்தியின் ஜாதகத்தை எடுத்து வரச் சொல்கிறார். உடனே விசாலாட்சி, எதற்கு அவனுடைய ஜாதகம்? என்று கேட்க, அவனுக்குப் பெண் பாக்கவா கேட்க போறேன், ஜாதகத்தை எடுத்துட்டு வாமா என்று குணசேகரன் சொல்கிறார்.

Advertisement

அப்போது அங்கு வரும் சக்தி, இந்த வீட்டில் உள்ள அனைவரும் ஏற்கனவே ஜோசியம் பார்த்துவிட்டீர்க. இனி பார்ப்பதற்கு ஒன்னும் இல்ல, ஜாதகத்தை நான் தரமாட்டேன் என்கிறார். அதற்கு குணசேகரன், இந்த குடும்பத்தில் இது வழக்கம் தானே, எனக்கு குழந்தை பிறந்தபோதும், இவருடைய அப்பா ஜாதகம் பார்த்தார். அதேபோல் இப்போது ஜனனிக்கு குழந்தை பிறக்கப் போகிறது. அதனால் கண்டிப்பாக ஜாதகம் பார்க்க வேண்டும் என்கிறார்.

Advertisement

எதிர்நீச்சல்: உடனே ஜனனி, இந்தக் குழந்தையால் உங்களுக்கு ஏதாவது ஆபத்து வருமா என்று பாக்க போறீங்களா? என்று கேட்டு, ஜாதகத்தை தர முடியாது என்கிறாள். இதனால் ஜோசியர், ஜாதகம் இல்லாவிட்டாலும் பிரசன்னம் பார்த்து சொல்ல முடியும் என்று கூறி சோழி போட்டு பார்க்கிறார். பின்னர், இப்போது கருவில் இருக்கும் குழந்தை பெண் குழந்தை, அந்த பிறந்தால் குடும்பத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். குறிப்பாக குடும்பத்தின் மூத்தவரின் உடல்நலத்திற்கும், சிறைக்கு போகக்கூடும், உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம் என்கிறார்.

Photo Credit:

குழந்தையால் ஆபத்து: இதைக் கேட்ட கதிர், அண்ணா ஏற்கனவே ஜோசியர் இப்படித்தான் சொன்னார். இங்பபோ இவருக்கும் அதேயே சொல்கிறார். அப்படி இருக்கும் போது, இந்தக் குழந்தை பிறக்காமல் இருப்பது தான் நல்லது என்கிறார். இதைக்கேட்ட சக்தி ஆத்திரமடைந்து கதிரை அடிக்க பாய்கிறார். உடனே நந்தினி, என்னங்க பேசுறீங்க, குழந்தையைப் பற்றி இன்னொரு வார்த்தை பேசாதீங்க என்கிறாள். ஆனால் கதிர், நீ வாயை மூடு, தேவையில்லாமல் இந்த விஷயத்தில் தலையிடாதே என்று நந்தினியை திட்டுகிறார். இதனால் வீட்டில் பெரும் கலவரம் வெடிக்கிறது. அப்போது விஷாலாட்சி, நீங்களும் மனுஷங்கதானா? வயிற்றில் இருக்கும் ஒரு கருவை பற்றி இப்படிப் பேசுவது சரியல்ல. இனிமேல் என்ன நடந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அனைவரையும் கடுமையாக திட்டிவிட்டு, சக்தி மற்றும் ஜனனி இருவரையும் அறைக்குள் அழைத்துச் செல்கிறார்.

Advertisement

அதன் பின், ராவணன், என்ன கதிர் இதெல்லாம், இதற்கு தான் ஜோசியத்தை நம்பாதீங்கனு சொன்னோன். இன்னும் மூன்று நாட்களில் திறப்பு விழா இருக்கு. இப்போது போய் இதெல்லாம் தேவையா, வாங்க நம்ம திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை செய்யலாம் என்று அனைவரையும் நடிகை தூரிகா வீட்டிற்கு அழைத்து செல்கிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை நாளை பார்க்கலாம்.