சென்னை: சன் டிவியின் பிரம்மாண்ட மெகா ஹிட் சீரியலான 'எதிர்நீச்சல் தொடர்கிறது' இன்றைய எபிசோடில், ஜனனியின் அம்மா பார்வதி 10 லட்சம் பணத்தைக் கொடுத்துத் தனிக்குடித்தனம் போகச் சொன்னதும், அதைத்தடுத்து நிறுத்தி குணசேகரன் கொந்தளித்ததும் ரசிகர்களைக் நெகிழ்ச்சியிலும் பரபரப்பிலும் ஆழ்த்தியுள்ளது.
எதிர்நீச்சல் தொடர்கிறது: இன்றைய எபிசோடில், ஜனனியின் அம்மா பார்வதி தனது ஊருக்குக் கிளம்புவதற்காகக் கீழே வருகிறார். அப்போது வீட்டிலிருக்கும் குணசேகரனிடம், நீங்க எங்க வீட்டுக்கு வந்து, உங்க குடும்பத்தைப் பத்தி பெருமையா பேசி என் மகளைப் பெண் கேட்டதை நான் இன்னமும் மறக்கலை. அப்படித்தான் ஜனனியை சக்திக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க. ஆனா, அன்னைல இருந்து இன்னைக்கு வரைக்கும் என் பொண்ணு நிம்மதியா வாழவே இல்லை என்கிறாள்.
எகிறிய குணசேகரன்: பார்வதியின் பேச்சைக் கேட்டு ஆத்திரமடைந்த குணசேகரன், சும்மா நிறுத்துமா, தேவையில்லாம பேசாதீங்க... உங்க பொண்ணு நல்லா வாழாததுக்கு நாங்க காரணம் இல்லை. அவ என்னென்ன வேலை பண்ணியிருக்கா தெரியுமா? எங்க வீட்டுப் பெண்கள் வெளியே போனாலே பெரிய வீட்டு மருமகள்கள் போறாங்கன்னு மதிப்பா பேசுவாங்க. ஆனா உங்க பொண்ணு வீட்ல இருந்த பெண்களைக் கூட்டிட்டுப் போய் லாட்ஜ்ல தங்க வச்சா... ஜீவானந்தத்தோட சேர்ந்து குடும்பத்துக்கு எதிரா நடந்துகிட்டா... என் மகளையே கடத்தி குடும்பக் கௌரவத்தையே கெடுத்துட்டா என அடுக்கடுக்காகப் பழியைப் போடுகிறார்.
என் பொண்ணு மாசமா இருக்கா: இதற்கெல்லாம் அசராத பார்வதி, நான் விவாதம் பண்ண வரல... என் மகள் இப்போ கர்ப்பமா இருக்கா, அவ சந்தோஷமா இருக்கணும். அவ என்ன தப்பு பண்ணியிருந்தாலும் மன்னிச்சிடுங்க" எனக் கையெடுத்துக் கும்பிடுகிறார். அப்போது நடுவில் புகுந்த கதிர், "மாசமா இருந்தா அதுக்கு நாங்களா என்ன பண்ண முடியும்?" என அசிங்கமாகப் பேச, கடுப்பான விசாலாட்சி, "டேய்! இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினா அவ்வளவுதான்! பார்வதி, நீங்க எதுக்கு இவங்ககிட்ட பேசுறீங்க? இவங்க எப்பவுமே இப்படித்தான்... மகளைப் பார்த்துட்டுப் போங்க!" என கதிரை அடக்குகிறார்.
10 லட்சம் பணம்: இதனைத்தொடர்ந்து தனது பையிலிருந்து ₹10 லட்சம் பணத்தை எடுத்து ஜனனியிடம் கொடுக்கும் பார்வதி, சென்னையில இருந்த வீட்டை விற்ற பணத்துல அப்பாவோட செலவு போக மீதியை உனக்காகத்தான் கொண்டு வந்தேன். நீங்க தனியா வீடு பார்த்து நிம்மதியா வாழணும், அதுதான் ஒரு அம்மாவா என் கடமை!" எனக் கூறி ஜனனியைக் கட்டிப்பிடித்துக் கதறி அழுகிறார். இறுதியில், பார்வதி கண்ணீருடன் வீட்டை விட்டு வெளியேற, ஜனனியும் சக்தியும் இனி தனியாகச் சென்று வாழ்வார்களா? அதற்கு இந்தக் கொடூர குணசேகரன் சம்மதிப்பாரா? என்ற பயங்கர எதிர்பார்ப்புடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.
More Articles
- மெட்ராஸ்ல இருந்து வந்த அனாதை அவ.. ஜனனியைப் பற்றி கேவலமாகப் பேசிய குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது
- இனிமே உனக்கு சித்தியும் கிடையாது.. சித்தப்பாவும் கிடையாது.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
- யார் இந்த ராணா? வீட்டிற்கு வந்த தர்ஷனுக்கு காத்திருந்த ஷாக்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
- பத்திரத்தில் கையெழுத்து போட்ட நேரம் வெடித்த டிரான்ஸ்ஃபார்மர்.. அபசகுனத்தால் நடுங்கிப்போன குணசேகரன்
- ஜனனி வயித்துல இருக்குற குழந்தையை அழிக்கனும்.. ஜாதகத்தால் வெடித்த கலவரம்.. எதிர்நீச்சல்!
- ஈஸ்வரி காலில் விழாத குறையாக கைகூப்பி அழுத குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!