சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இன்றைய எபிசோடுல ஜனனி வருத்தமா இருப்பதை பார்த்த சக்தி எதுக்காக இப்படியே வருத்தமா இருக்க ஜனனி,எத பத்தியும் கவலைப்படமா நீ நிம்மதியா இரு, அம்மாவும் என் பொண்ணு எது செஞ்சாலும் நல்லதுக்காக தான் செய்வா அவ மேல எனக்கு நம்பிக்கை இருக்குனு சொல்லிட்டு தான் போனாங்க என்கிறார்.
உடனே ஜனனி இல்ல சக்தி நான் அம்மாவை பத்தி கவலைப்படல, எனக்கு இந்த ராவணனை பத்தி தான் கவலையா இருக்கு, அவன் யாரு எதற்காக இந்த வீட்டுக்குள்ள வந்து எல்லாரையும் கைக்குள்ள போட்டுக்குறான்னு எனக்கு ஒண்ணுமே புரியல சக்தி, உண்மையிலேயே அவன் இந்த குடும்பத்துக்கு ஏதாவது நல்லது செய்யணும் நினைச்சிருந்தா இப்படி வீட்டுக்குள்ள வந்து உக்காந்துகிட்டு நாட்டாமை பண்ணவேண்டிய அவசியம் கிடையாது. ஆனால், இவன் வீட்டுக்குள்ள வந்து இருக்கிறத பார்த்தா ஏதோ ஒரு சந்தேகமா இருக்கு எனக்கு என்கிறார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது: அப்போது சக்தி, எனக்கும் புரியுது ஜனனி, ஆனா வீட்ல இருக்கிற அண்ணனிலிருந்து ஞானம், கதிர், யாருமே அவன பத்தி எதுவுமே தெரியாம அவன் பேச்சைக் கேட்டு ஆடிட்டு இருக்காங்க நம்ம இதுக்கு மேல என்ன பண்ண முடியும் என்று கேட்கிறார். மதிவதனி மேடமுகே இந்த ராவணனை பத்தி எதுவுமே தெரியல, ஒரு போலியான சர்டிபிகேட் கொடுத்து அவங்கள அவன் ஏமாத்திருக்கான். அப்படிப்பட்டவனை இந்த குடும்பத்துக்குள் எதுக்கு வந்து இருக்கான். அதை நினைக்கும்போது தான் எனக்கு பயமா இருக்கு, நிச்சயமா இந்த திறப்பு விழாவில் ஏதோ ஒரு பெரிய பிளானை அவன் செய்கிறான் என எனக்கு தோணுது சக்தி.
யார் அந்த ராவணன்: அதனால இந்த திறப்பு விழா நிச்சயமா நடக்கவே கூடாது. அதோட மட்டும் இல்லாம அந்த திறப்பு விழாக்குள்ள இந்த ராவணன் யாரு, எதுக்காக இப்படி எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கான் என்கிற விஷயத்தை எல்லாத்தையும் நம்ம சீக்கிரம் கண்டுபிடிக்கணும், ராவணன் பத்தி எதுவுமே தெரியாமல், அக்கா எல்லாம் அவனை நம்பிகிட்டு இருக்காங்க, ஏதாவது தப்பு நடப்பதற்குள் அவன் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்கிறாள்.
ராவணனின் பிளான்: இதையடுத்து, குணசேகரன் கதிரிடம் பேசும் ராவணன், திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் எல்லாம் நல்லபடியா போயிட்டு இருக்கு சார். ஆனா, உங்களுடைய அம்மா இந்த விழாவுக்கு வரமாட்டேன்னு சொல்றாங்க அத நெனச்சா எனக்கு வருத்தமா இருக்கு, ஆயிரம் தான் இருந்தாலும் அவங்க உங்க அம்மா, உங்க மேல இருக்கிற கோவத்தினால் தான் அவங்க வரமாட்டேன்னு சொல்றாங்க இந்த திறப்பு விழாவுக்கு அவங்க வந்தா உண்மையிலேயே நான் ரொம்ப சந்தோஷப்படுவேன் என்கிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.
More Articles
- என் பொண்ணு மாசமா இருக்கா.. தயவுசெஞ்சு விட்டுடுங்க கதறிய அம்மா.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
- மெட்ராஸ்ல இருந்து வந்த அனாதை அவ.. ஜனனியைப் பற்றி கேவலமாகப் பேசிய குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது
- இனிமே உனக்கு சித்தியும் கிடையாது.. சித்தப்பாவும் கிடையாது.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
- யார் இந்த ராணா? வீட்டிற்கு வந்த தர்ஷனுக்கு காத்திருந்த ஷாக்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
- பத்திரத்தில் கையெழுத்து போட்ட நேரம் வெடித்த டிரான்ஸ்ஃபார்மர்.. அபசகுனத்தால் நடுங்கிப்போன குணசேகரன்
- ஜனனி வயித்துல இருக்குற குழந்தையை அழிக்கனும்.. ஜாதகத்தால் வெடித்த கலவரம்.. எதிர்நீச்சல்!