சென்னை: 'செகண்ட் லவ்' என்ற முற்றிலும் புதியதொரு ரியாலிட்டி ஷோ டிஸ்னிஹாட் ஸ்டாரில் நேற்று ஒளிபரப்பானது. இந்த ஷோவின் ப்ரோமோ வெளியான போதே கடுமையான விமர்சனத்திற்கு உள்ளநிலையில், தற்போது ஒளிபரப்பான எபிசோடை பார்த்த நெட்டிசன்ஸ் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

Advertisement

இந்த 'செகண்ட் லவ்' ஷோவின் கான்செப்ட் என்னவென்றால்... ஆறு ஆண்கள், ஆறு பெண்கள் என மொத்தம் 12 பேர் ஒரே வீட்டுக்குள் ஐந்து வாரங்கள் இருக்க வேண்டும். இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இதில் கலந்துகொண்டுள்ள ஒவ்வொரு போட்டியாளருமே தங்களது முதல் காதலில் தோற்றுப் போய், மனதளவில் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு மீண்டும் காதலை தேடி இந்த 12 பேரும் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்கள்.

Advertisement

Photo Credit:

செகண்ட் லவ்: இந்த ஷோவின் நடுவராக நடிகை ரம்யா கிருஷ்ணனும், அவருடன் இணைந்து ஸ்ருதிகா அர்ஜுன் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். நேற்று ஒளிபரப்பான முதல் எபிசோடில் 6 பெண் போட்டியாளர்களையும், 6 ஆண் போட்டியாளர்களையும் ரம்யா கிருஷ்ணன் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்போது, ஒவ்வொரு போட்டியாளரும் தங்களது முதல் காதல் எப்படித் தோல்வியில் முடிந்தது, அதன் வலிகள் என்னென்ன என்பதைக் கண்ணீருடன் விவரித்தனர். போட்டியாளர்களின் முந்தைய காதல் கதையைக் கேட்டு ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணைப் பிடித்துவிட்டால், அந்தப் பெண் அந்த ஆணுடன் டேட்டிங் செய்யலாம். ஒருவேளை, இரண்டு அல்லது மூன்று பெண்களுக்கு ஒரே ஆணைப் பிடித்துவிட்டால், அவர்கள் அத்தனை பேரும் அந்த ஆணுடன் டேட்டிங் செய்யலாம்.

Advertisement

குவியும் கண்டனம்: அதேபோல, ஒரு ஆணுக்கும் இரண்டு பெண்களைப் பிடித்துவிட்டால், அவர் இரண்டு பெண்களுடன் டேட்டிங்கில் இருக்கலாம். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருத்தருடன் டேட்டிங் செய்து, தங்களுக்குத் தகுந்த உண்மையான காதலை அவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். இதற்குப் பெயர் Blind Date என்கிறார்கள். நேற்று இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானதைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் இதுகுறித்த வீடியோக்கள் வெளியாகிப் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், இரண்டு பெண்கள் சேர்ந்து ஒரே ஆணுடன் டேட்டிங் செல்வதா? காதல் என்பது புனிதமானது... அதை இப்படித் கொச்சைப்படுத்துவது சரியில்லை என்றும், இது நமது கலாச்சாரத்திற்கு எதிரானது என்றும் சமூக வலைத்தளங்களில் தங்களது கடும் கண்டனங்களையும் விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.