சென்னை: கார்த்திக், ரேவதி பற்றி விஷயம் தெரிந்த டாக்டரின் மகள் ராதிகா உண்மையை சொல்ல போகிறேன் என்று சொன்னதால் பதற்றம் அடைந்த டாக்டர், மகள் ராதிகா ரூமில் அடைந்து வைக்கிறாள். ஆனால், ராதிகா ரூமில் இருந்து தப்பித்து சாமுண்டீஸ்வரி வீட்டுக்கு வருகிறாள். ராதிகா தப்பித்துவிட்டதால் பதறிப்போன டாக்டர், சந்திரகலாவுக்கு ஃபோன் போட்டு விஷயத்தை சொல்ல அவள் ஏற்கனவே டாக்டர் பேசிய வீடியோவை அனுப்பி உன் பொண்ணு மட்டும் இங்க வந்தா இந்த வீடியோ டாக்டர் கவுன்சிலுக்கு போகும், உன் வேலை பறி போய் விடும் என மிரட்டுகிறார். உடனே டாக்டர் அப்படி எதுவும் செய்துவிடாதீங்க, அதற்காகத்தான் நான் முன்கூட்டியே இந்த விஷயத்தை உங்களிடம் சொல்கிறேன், அவளை எப்படியாவது தடுத்துவிடுங்கள் என்கிறார்.

Advertisement

இதையடுத்து, சந்திரகலா, வாசலில் நின்று கொண்டு ராதிகாவை வீட்டிற்குள் விடாமல் தடுக்கிறாள். ஆனால், ராதிகா, சந்திரகலாவை தள்ளிவிட்டு நேராக ரேவதியை சந்தித்து, உங்களுக்கு நடந்த விபத்தில் பல விஷயத்தை மறந்துவிட்டீங்க, உங்களுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு என்று சொல்ல ரேவதி அதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறாள்.

Advertisement

Photo Credit:

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், ராதிகா சொன்ன உண்மையை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். ரேவதியும் இதை நம்பி என்னுடைய புருஷன் யார் என கேள்வி கேட்கிறாள். இதனால் சாமுண்டீஸ்வரி மற்றும் சந்திரகலா என இருவரும் மேலும் பதற்றம் அடைய இந்த சமயத்தில் வீட்டுக்குள் வந்த டாக்டர் என் பொண்ணு மனநலம் பாதிக்கப்பட்டவள், அவ தெரியாம இப்படி சொல்லிட்டா என்று சொல்லி ராதிகாவை அழைத்துச் செல்ல சந்திரகலா, சாமுண்டீஸ்வரி இருவரும் நிம்மதி அடைகின்றனர்.

கார்த்திக்கிற்கு தெரியவந்த உண்மை: ஆனால் ரேவதிக்கு எனக்கு என்னமோ அந்த பொண்ணு சொல்றது உண்மை என்பது போல தான் தோன்றுவதாக சந்தேகம் கொள்கிறாள். சாமுண்டீஸ்வரி என்ன நடக்குது இங்க என்று சந்திரகலாவிடம் விசாரிக்க நான் தான் அக்கா, அந்த டிரைவரிடம் இருந்து ரேவதியை காப்பாற்ற இப்படி சொல்ல சொன்னதாக சொல்கிறாள். ராதிகா வீட்டிற்கு வந்து சொன்ன விஷயத்தை மயில்வாகனம் கார்த்தியிடம் சொல்ல, இது உண்மை தானா என்பதை தெரிந்து கொள்ள கார்த்திக் டாக்டர் வீட்டிற்கு சொல்ல, அங்கு ராதிகாவை டாக்டர் அறையில் பூட்டி வைத்து இருக்கிறாள். அதைத்தொடர்ந்து, ராதிகா கார்த்தியிடம் அனைத்துவிஷயத்தையும் சொல்ல கார்த்திக் அதிர்ச்சி அடைந்கிறான். பின், கார்த்திக் சந்திர கலாவை சந்தித்து நீங்க பண்றது ரொம்ப தப்பு என எச்சரிக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.