சென்னை: இன்றைய எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோடில், ராணா தொடர்ந்து பிசினஸ் விஷயங்களில் தலையிடுவது நந்தினி மற்றும் ரேணுகாவுக்கு பிடிக்கவில்லை. பிசினஸ் விஷயத்தில் தலையிடாதீங்க என அவர்களே நேரடியாக எச்சரித்தாலும், ராணா தொடர்ந்து பிஸ்னஸ் பற்றி பேசியதால், ஆத்திரப்பட்டு நந்தினி கத்துகிறாள். இதனால், அவர்களை சமாதானப்படுத்த முயன்ற ராணா, அண்ணி, இதைப் பற்றி இப்போ பேச வேண்டாம். இன்னும் 15 நாளில் நம்ம பஸ் வரப்போகுது. அதற்குள் கதிரின் பிசினஸை தொடங்கிடலாம். அந்த தொடக்க விழாவை பிரம்மாண்டமாக நடத்தி, ஒரு பெரிய செலிபிரிட்டியை அழைத்துவந்தால் பிசினஸ் நல்ல வரவேற்பு பெறும். சமூக வலைத்தளங்களிலும் வைரலாக்கலாம் என தனது திட்டத்தை கூறுகிறார்.

Advertisement

இதைக்கேட்ட நந்தினி மற்றும் ரேணுகா கடும் கோபமடைகிறார்கள். யார் பேரில் பிசினஸ் ஆரம்பிக்கப் போறீங்க? ஜிஎஸ்டி பதிவு, தேவையான ஆவணங்கள், எந்த இடத்தில் ஆரம்பிக்க போகிறோம் என எதையும் கதிரிடம் ஆலோசிக்காமல் நீங்களாக எப்படி முடிவு எடுத்தீங்க? முதலில் எல்லா ஆவணங்களையும் நான் பார்க்க வேண்டும் என்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ராணா அங்கிருந்து வெளியேறி, தனது பி.ஏ. லக்ஷ்மனை சந்தித்து கோபமாக பேசுகிறார். அப்போது ராணா, அந்த சக்தி எங்கே போனான்? ஏதாவது தகவல் கிடைத்ததா? என்று கேட்கிறார். அதற்கு லக்ஷ்மன், நம்ம ஆளுங்க அவனை கண்காணிக்கும்போது தவறவிட்டுட்டாங்க. இப்போ எங்க இருக்கான்னு தெரியல என்று கூறுகிறார்.

Advertisement

Photo Credit:

ராணாவின் திட்டம் என்ன: இதைக் கேட்டதும் ராணா மேலும் கோபமடைந்து, எப்படியாவது சக்தியை கண்டுபிடிக்கும்படி உத்தரவிடுகிறார். அதே நேரத்தில் லக்ஷ்மன் ராணாவிடம் உணர்ச்சிகரமாக, தம்பி, நீங்க என்னை தவறாக நினைக்காதீங்க. என்னோட பொண்ணோட உயிரை காப்பாத்தியது நீங்கதான். நீங்க இல்லையென்றால் அவள் இன்று உயிரோட இருந்திருக்க மாட்டாள். அவளை சிதைத்தவர்களுக்கு சரியான தண்டனையும் வாங்கிக் கொடுத்தது நீங்கதான். அந்த உதவியை நான் வாழ்க்கையில் எப்போதும் மறக்க மாட்டேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார். இந்த உணர்ச்சிகரமான காட்சியுடன் இன்றைய எபிசோடு நிறைவடைந்தது. அடுத்த எபிசோடில் சக்தி எங்கே இருக்கிறார்? ராணாவின் அடுத்த நடவடிக்கை என்ன? கதிரின் பிசினஸ் திட்டம் என்ன ஆகும்? என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.