சென்னை: கார்த்திகை தீபம் சனிக்கிழமை எபிசோடில், ரேவதிக்கு ஒரு கொரியர் வர அதில் ஹனிமூன் டிக்கெட் இருப்பதை பார்த்து குழப்பம் அடைகிறாள். மீண்டும் பைக் வாங்கியதற்காக பரிசாக இந்த ஹனிமூன் டிக்கெட் கிடைத்திருப்பதாக தெரியவர அவளது குழப்பம் மேலும் அதிகரிக்கிறது. இதனால், ரேவதி ஷோரூமுக்கு போன் செய்து, நான் பைக் வாங்கவில்லை என சொல்கிறாள். அங்கு இருக்கும் பெண் மேடம் எங்க ஆபிசில் புல்லட் பைக் புக் செய்தவர்களுக்குத்தான் இந்த ஹனிமூன் டிக்கெட்டை அனுப்புவார்கள் என்று சொல்கிறார். மேலும் உங்க பெயர், முகவரி சொல்லுங்க என அந்த பெண் செக் செய்து பார்த்துவிட்டு, மேடம் உங்க பெயரில் தான் பைக் புக்காகி இருக்கு, நீங்கதான் பைக் வாங்கனீங்க என்று சொல்ல, இது எப்போ நடந்தது என்ற சந்தேகம் எழுகிறது.

Advertisement

கார்த்திகை தீபம்: அதாவது ரேவதி நேரடியாக கிளம்பி ஷோரூம் வந்து நானா பைக் வாங்கினேன் என்று விசாரிக்க. ஷோ ரூம் மேனேஜர், ஆமாம் மேடம் நீங்க தான் வங்குனீங்க, உங்களை மறக்கவே முடியாது இங்கே அவ்வளவு பார்த்து பார்த்து கஸ்டமைஸ் பண்ணி, உங்க புருஷனுக்காக பைக் வாங்குனீங்க என்று சொல்லி சிசிடிவி ஆதாரங்களையும் காட்டுகிறார்கள். சிசிடிவியை பார்த்த அதிர்ச்சி அடைந்த ரேவதி தனக்கு ஏற்கனவே திருமணம் ஆனது உண்மை தான் என்ற விஷயம் தெரிய வருகிறது. அடுத்து வீட்டுக்கு வந்த ரேவதி தனக்கு திருமணமானது குறித்த ஆதாரம் ஏதாவது கிடைக்கிறதா என தேடி பார்க்க எதுவும் கிடைக்கவில்லை என்பதால் வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் சேர்ந்து ஏதோ மறைப்பதாக யோசிக்கிறாள்.

Advertisement

Photo Credit:

சாமுண்டீஸ்வரியின் திட்டம்: பிறகு சாமுண்டீஸ்வரியிடம் கோவிலுக்கு செல்வதாக சொல்லிவிட்டு எப்படியும் நமக்கு தெரிய மண்டபத்தில் தான் திருமணமாகி இருக்கும் மண்டபங்களில் விசாரித்தால் திருமணமானது குறித்து நிச்சயம் தகவல் கிடைத்துவிடும் என முடிவெடுத்து பெரிய பெரிய மண்டபங்களுக்கு சென்று விசாரிக்க தொடங்குகிறாள். ஆனால், ஏற்கனவே சாமுண்டீஸ்வரி என் பொண்ணு வந்து, கல்யாணத்தை பற்றி கேட்டால் எந்த தகவலும் கொடுக்கக் கூடாது, அவளுக்கு திருமணமான விஷயத்தையே மறைத்துவிடுங்கள் என சொல்லி அனைத்தையும் அழித்துவிட சொல்கிறார். இதனால், மண்டபங்களில் ரேவதியிடம் அந்த கல்யாண மண்டப மேனேஜர், உங்க பெயர் இல்லை என சொல்லி விடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.