சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில் பைக் ஷோ ரூமில் சிசிடிவியை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரேவதி தனக்கு ஏற்கனவே திருமணம் ஆனது உண்மை தான் என்ற விஷயம் தெரிய வருகிறது. அடுத்து வீட்டுக்கு வந்த ரேவதி தனக்கு திருமணமானது குறித்த ஆதாரம் ஏதாவது கிடைக்கிறதா என தேடி பார்க்க எதுவும் கிடைக்கவில்லை என்பதால் வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் சேர்ந்து ஏதோ மறைப்பதாக யோசிக்கிறாள். பின் சாமுண்டீஸ்வரியிடம் கோவிலுக்கு செல்வதாக சொல்லிவிட்டு எப்படியும் நமக்கு தெரிந்த மண்டபத்தில் தான் திருமணமாகி இருக்கும் மண்டபங்களில் விசாரித்தால் திருமணமானது குறித்து நிச்சயம் தகவல் கிடைத்துவிடும் என முடிவெடுத்து பெரிய பெரிய மண்டபங்களுக்கு சென்று விசாரிக்க தொடங்குகிறாள்.

Advertisement

ஆனால், ஏற்கனவே சாமுண்டீஸ்வரி என் பொண்ணு வந்து, கல்யாணத்தை பற்றி கேட்டால் எந்த தகவலும்
கொடுக்கக் கூடாது, அவளுக்கு திருமணமான விஷயத்தையே மறைத்துவிடுங்கள் என சொல்லி அனைத்தையும் அழித்துவிட சொல்கிறார். இதனால், ரேவதிக்கு திருமணமான கல்யாண மண்டப மேனேஜர், உங்க பெயர் இல்லை இதில் இல்லை உங்களுக்கு இங்கு கல்யாணம் ஆகவில்லை என சொல்லி அனுப்பி விடுகிறார். ஆனால், ரேவதி மனதில் ஏதோ ஒரு எண்ணம் இருந்து கொண்டே இருக்கிறது.

Advertisement

Photo Credit:

கார்த்திகை தீபம்: இன்றைய ரேவதி மண்டபத்திற்கு வெளியே வந்து நிற்க அந்த மண்டபத்தில் வேலை செய்த பெண்மணி ஒருவர் ரேவதி பார்த்து அம்மா நல்லா இருக்கீங்களா உங்க கணவர் நல்லா இருக்காரா என்று நலம் விசாரிக்க ரேவதி குழப்பம் அடைகிறாள். பிறகு அந்த பெண்மணியிடம் பேச்சு கொடுக்க ரேவதிக்கு இந்த மண்டபத்தில் தான் திருமணம் நடந்தது என்ற விஷயம் தெரிய வருகிறது. அடுத்ததாக போட்டோகிராபரை சந்தித்து போட்டோவை வாங்கலாம் என்று ரேவதி, போட்டோகிராபரை சந்தித்து கல்யாணம் விஷயம் பற்றி பேச அன்றைய தினத்தின் கல்யாண ஃபுட்டேஜ் மட்டும் மிஸ்ஸானது தெரிய வருகிறது.

Advertisement

கார்த்திக் தான் என் புருஷனா?: பிறகு கோவிலுக்கு வந்த அவள் என்ன செய்வது தனது கணவர் யாருமே எப்படி கண்டுபிடிப்பது என யோசனையில் இருக்க கார்த்தி மாமாவிடம் உதவி கேட்கலாம் என முடிவெடுக்கிறாள். கார்த்தியை சந்திக்க கோவிலுக்கு வர கும்பாபிஷேக வேலையில் கார்த்திக் பிஸியாக இருக்கிறான். அப்போது ஒருவர் நவதானியம் வேண்டும் என்று கேட்க,கார்த்திக் ரேவதியிடம் கார் சாவியை கொடுத்து காரில் நவதானியம் இருக்கிறது அதை கொண்டு வா என்று சொல்ல காரை திறக்கும்போது கார்த்தியின் பர்ஸ் கீழே விழுகிறது. அந்த பர்சில் ரேவதி, கார்த்தியின் திருமண போட்டோ இருக்க கார்த்தி மாமா தான் தன்னுடைய கணவர் என்ற என்கிற உண்மை ரேவதிக்கு தெரிய வருகிறது. ரேவதி கண்ணீருடன் இருக்க கார்த்திக் என்ன ஆச்சு என்று கேட்க ரேவதி கண்ணீரை துடைத்துக் கொண்டு சமாளிக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.