சென்னை: கார்த்திகை தீபம் சனிக்கிழமை எபிசோடில் கோவில் கும்பாபிஷேக கலச பூஜைக்கான ஏற்பாடுகள் நடக்கிறது. ஆனால், ராஜராஜன் வராததால் சிவனாண்டி பிரச்சனை செய்கிறார். மேலும், ராஜராஜன் வரவில்லை என்றால், இந்த முறை நான் தான் கலச பூஜை செய்வேன் என்று சொல்ல ஊர்மக்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால், கார்த்திக், மாமா வரவில்லை என்றால்தானே இவர் பூஜை செய்வார், மாமா கண்டிப்பா வருவார், நான் அழைத்து வருகிறேன் என்று சொல்கிறார்.
இதையடுத்து, சாமுண்டீஸ்வரிக்கு வீட்டுக்கு வரும் கார்த்திக், மாமாவை பூஜைக்கு அனுப்பும்படி அழைக்க, சாமுண்டீஸ்வரி எந்தவிதமான பிரச்சனையும் செய்யாமல் தாராளமாக கூட்டிட்டுப்போங்க என்று சொல்கிறார். இதைக்கேட்டு ஆத்திரப்படும் சந்திரகலா, என்ன அக்கா எதுக்காக மாமாவை அனுப்புற என்று கேட்க அமைதியா இரு சந்திரா எதுவும் பேசாதே, நான் ஒரு விஷயம் செய்தா அதுக்கு பின்னாடி பல காரணம் இருக்கும் என்று சொல்கிறார். இதையடுத்து, ராஜராஜன், ரேவதி, ரோகிணி, மயில்வானம் என அனைவரும் பூஜையில் கலந்து கொள்வதற்காக கோவிலுக்கு செல்கின்றனர்.
கார்த்திக தீபம்: பூஜைக்கு ராஜராஜன் வந்ததை பார்த்து ஆத்திரப்படும் சிவனாண்டி, சந்திராவிற்கு போன் செய்து என்ன சந்திரா, ராஜராஜன் வரமாட்டாருனு சொன்ன இப்போ வந்து இருக்கிறார். இந்த முறை பூஜையில் நான் கலந்து கொள்ள போறேன் என ஆசையா இருந்தேன். ஆனால், எப்படி வந்தார் என்று கேட்க, சந்திரகலா கோவத்துடன், ஆமாங்க, அக்கா மாமாவை அனுப்புவா என்று நான் எதிர்பார்க்கவே இல்லை, நீங்க தான் பூஜையில் கலந்துக்க வேண்டும் அதை நான் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால் இப்படி ஆகிவிட்டது என்று புலம்புகிறாள். மேலும், கவலைப்படாதீங்க, நீங்க தான் கலச பூஜை பண்ண போறீங்க, அந்த ராஜராஜன் பூஜை செய்யமுடியாதபடி ஒரு திட்டத்தை போடுகிறேன் என சொல்லிவிட்டு போனை வைக்கிறாள்.
ராஜராஜனுடன் பழக்கம்: இதையடுத்து, சந்திரகலா, வீட்டில் சாமுண்டீஸ்வரியின் நகை ஒன்றை எடுத்து, ஒரு பெண்ணிடம் கொடுத்து என்னை ராஜராஜன் ஏமாற்றிவிட்டார் என்று ஊர் மக்கள் முன் சொல்ல சொல்கிறாள். சந்திரகலா சொன்னது போலவே, அந்த பெண்ணும் பூஜை நடக்கும் இடத்திற்கு வந்து நானும் ராஜராஜனும் திருமணத்தை மீறிய உறவில் இருந்தோம். ஆனால், இப்போது என்னை ஏமாற்றி விட்டதாக சொல்கிறாள். இதைக்கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். ஆனால், கார்த்திக் நீங்க யாரு, தேவையில்லாமல் இப்படி அவர் மீது பழிப்போடக்கூடாது என்று சொல்ல, அந்த பெண் நான் தேவையில்லாமல் பழி போடவில்லை. நான் ஆதாரத்தை காட்டுகிறேன் என்று, பையில் இருந்த நகையை எடுத்து. இது சாமுண்டீஸ்வரியோட நகை, நான் செலவுக்கு பணம் கேட்ட போது, இப்போதைக்கு பணம் இல்லை என்று சொல்லி இந்த நகையை கொடுத்தார் என்று சொல்ல, ஊர் மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.