சென்னை: கார்த்திகை தீபம் நேற்றைய எபிசோடில் சந்திரகலாவின் திட்டத்தின் படி,
பூஜை நடக்கும் இடத்திற்கு வந்த பெண், ராஜராஜன் என்னை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி ஏமாற்றிவிட்டார் என்கிறார். இதைக்கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். ஆனால், கார்த்திக் நீங்க யாரு, தேவையில்லாமல் இப்படி அவர் மீது பழிப்போடக்கூடாது என்று சொல்ல, அந்த பெண் நான் தேவையில்லாமல் பழி போடவில்லை. நான் ஆதாரத்தை காட்டுகிறேன் என்று, பையில் இருந்த நகையை எடுத்து. இது சாமுண்டீஸ்வரியோட நகை, நான் செலவுக்கு பணம் கேட்ட போது, இப்போதைக்கு பணம் இல்லை என்று சொல்லி இந்த நகையை கொடுத்தார் என்று சொல்ல, ஊர் மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
கார்த்திக தீபம்: ஆனால், நகையை வைத்து எல்லாம் ஒருவர் மீது புகார் சொல்ல முடியாது என்று சொல்ல, அந்த பெண், ராஜராஜனுக்கு தொடையில் ஒரு மச்சம் இருக்கும் என்ற விஷயத்தையும் சொல்கிறாள். நீங்க வேண்டுமானால அவர் தொடையில் மச்சம் இருக்கா என்று பார்த்துக்கொங்க என்று சொல்ல, அதுவும் சரியாக பொருந்த அவர் பூஜையில் பங்கேற்க தகுதி இல்லாதவர்கள் நிர்வாகம் முடிவெடுக்கிறது. ஆனால், கார்த்திக், மாமா இந்த பூஜையில் கலந்து கொள்ளக்கூடாது என்பதற்கான யாரோ செய்த வேலை போல தெரிகிறது என்று சொல்கிறார். மேலும், எனக்கு ஒரு நாள் கால அவகாசம் கொடுங்க நாளைக்குள் நான் உண்மையை நிரூபிக்கிறேன். நாளைக்கும் முகூர்த்தம் நாள் தான் என்கிறார்.
அவகாசம் கேட்கும் கார்த்தி: ஆனால், சிவனாண்டி அவகாசம் எல்லாம் தரக்கூடாது, இவருக்கு இதுக்கு மேல பூஜை செய்ய தகுதியே இல்லை என்று சொல்கிறார். ஆனால், கோவில் நிர்வாகம், ராஜராஜன் அப்படிப்பட்டவர் இல்லை, எங்களுக்கும் இந்த பெண் மீது சந்தேகம் இருக்கு அதனால் இன்னைக்கு ஒரு நாள் காத்து இருக்கலாம் என சொல்கின்றனர். இதையெல்லாம் பார்த்த ராஜராஜன் அப்படியே இடித்துப்போய் இருக்க, மகள்கள் அப்பா நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க உங்க மேல எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கு. நீங்க இப்படிப்பட்ட ஆள் இல்லை, இதிலிருந்து கண்டிப்பாக உங்களை காப்பாற்றி விடுவோம் என்று வாக்கு கொடுக்கின்றனர்.
மாமா துரோகம் செய்துவிட்டார்: சிவனாண்டிக்கு நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்லும் சந்திரகலா சொல்கிறார். இதைக்கேட்ட சந்திரகலா சந்தோஷப்படுகிறாள். மேலும், இந்த விஷயத்தை சாமுண்டீஸ்வரியிடமும் சொல்கிறாள். ஆனால், சாமுண்டீஸ்வரி நம்ப மறுக்க, அக்கா அந்த பெண் எல்லாத்தையும் ஆதாரத்தோடத்தான் சொல்லி இருக்கா, வீட்டில் இருந்த உன்னோட நகை எப்படி அந்த பெண்ணுக்கிட்ட போச்சு, அதை பார்த்த ரோகிணி அது உன் நகை தான் என்று சொல்லி இருக்கா என்று சொன்னதும், சாமுண்டீஸ்வரி பீரோவில் நகை இருக்கா என்று பார்க்க, பீரோவில் நகை இல்லாதது தெரிகிறது. அப்போது, சந்திரகலா பாத்தியா அக்கா, மாமா உனக்காக அந்த குடும்பத்தை விட்டுவிட்டு வந்தேனு சொல்லிவிட்டு இப்படி உனக்கு ஒரு துரோகத்தை செய்து இருக்கிறார் என்று சொல்ல, இதைக்கேட்டு சாமுண்டீஸ்வரி அப்படியே இடித்துப்போகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
More Articles
- ராஜராஜனுக்கு கள்ளத்தொடர்பா?.. கலச பூஜையில் சந்திரகலா போட்ட அசிங்கமான ஸ்கெட்ச்.. கார்த்திகை தீபம்
- அடேங்கப்பா.. பிரசாந்த் தூக்கிய 130 கிலோ இளவட்டகல்.. 24 வருஷ ரகசியத்தை உடைத்த சினேகா!
- உன்னை எனக்குப் பிடிக்கல.. கார்த்திக், ரேவதி போட்ட டிராமா.. கார்த்திகை தீபம்!
- மாமனை வச்சு என்கிட்ட டீல் பேசுறீங்களா? கார்த்திக்கு சாமுண்டீஸ்வரியின் விதித்த கொடூர நிபந்தனை!
- பர்ஸில் இருந்த போட்டோ.. கார்த்தி தான் என் புருஷனா? ரேவதிக்குத் தெரிந்த உண்மை.. கார்த்திகை தீபம்
- ஷோரூமில் காத்திருந்த பேரதிர்ச்சி.. திருமண ரகசியத்தைத் தேடி அலையும் ரேவதி.. கார்த்திகை தீபம்!