சென்னை: சாமுண்டீஸ்வரி வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட கார்த்திக், ரேவதியை வெளியே அழைத்துச் செல்கிறான். இருவரும் ஒன்றாக இருப்பதை பார்த்த சந்திரகலாவுக்கு உடனே சந்தேகம் கிளம்ப, சிவனாண்டியிடம் தகவல் சொல்லி இருவரையும் பின் தொடர முடிவு செய்கிறாள்.

Advertisement

ரேவதியை தனது வீட்டிற்கு அழைத்து வரும் கார்த்திக், ரேவதிக்காக ஆசையாக கட்டிய வீட்டின் காசியை கொடுத்து, இந்த வீட்டை நான் உனக்காக ஆசையாக கட்டினேன். இதை நம் திருமண நாளில் உனக்கு கொடுக்கலாம் என நினைத்தேன். ஆனால், அதற்கு உனக்கு விபந்து நடந்து நீ எல்லாத்தையும் மறந்துட்ட என சொல்கிறார். மேலும், ரேவதியின் கையில் சாவியை கொடுத்து வீட்டை திறக்க சொல்ல, அதைப்பார்த்து ரேவதி கண் கலங்குகிறாள். மேலும், ரேவதிக்காக கார்த்திக் தனது கையாலேயே ஆசையாக சமைத்து பரிமாறுகிறான். ரேவதியும் அந்த அன்பை ரசித்து மகிழ்கிறாள்

Advertisement

Photo Credit:

கார்த்திகை தீபம்: இருவரையும் பின் தொடர்ந்து வரும் சந்திரகலா மற்றும் சிவனாண்டி கார்த்தியின் கார் அங்கு இருப்பதை பார்த்து, வீட்டுக்குள் நோட்டமிடுகின்றனர். பின் ஜன்னல் வழியாக இவற்றை பார்த்த சந்திரகலா மற்றும் சிவனாண்டி, இருவருக்கும் இடையே இருக்கும் நெருக்கத்தை புரிந்துகொள்கின்றனர். இதோடு நிற்காமல், இந்த விஷயத்தை சாமுண்டீஸ்வரியின் காதில் போட்டு பெரிய பூகம்பத்தை கிளப்ப வேண்டும் என்று சந்திரகலா திட்டம் போடுகிறாள்.

கல்யாணத்தில் என்ன நடந்தது: மறுபக்கம், கார்த்திக் ரேவதியிடம் திருமண ஆல்பத்தை ரேவதியிடம் காட்ட, அந்த புகைப்படங்களை பார்த்த ரேவதி திடீரென சோகமாக மாறுகிறாள். "ஏன் மாமா... நான் ஏன் கல்யாணத்தில் சோகமா இருக்கேன்?" என்று கேட்கிறார். அப்போது கார்த்திக், திருமணத்தின் போது என்னென்ன நடந்தது என்ற எல்லாத்தையும் ரேவதியிடம் சொல்கிறார். மேலும், அந்த பிரச்சனையால் தான் எதிர்பாராத திருப்பமாக நமக்கு திருமணம் நடந்தது என்பதை சொல்கிறார்.

Advertisement

மடியில் சாய்ந்து கொண்ட ரேவதி: கார்த்திக்கின் மனவேதனையை உணர்ந்த ரேவதி, மாமா உங்க மடியில் படுத்துக்கொள்ள வேண்டும் ஆசையா இருக்கு மாமா, படுத்துக்கவா என்று கேட்க, கார்த்திக் சிரித்துக்கொண்ட சம்மதம் சொல்ல, ரேவதி கார்த்தியின் மடியில் படுத்துக்கொண்டு மகிழ்ச்சிய அடைகிறாள். மறுபக்கம் வீட்டிற்கு திரும்பிய சந்திரகலா, கார்த்திக் - ரேவதி தொடர்பான உண்மையை சாமுண்டீஸ்வரியிடம் சொல்ல சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறாள். சந்திரகலா சொல்லப் போகும் தகவல் வீட்டில் புதிய பிரச்சினையை உருவாக்குமா? கார்த்திக் - ரேவதியின் நெருக்கம் சாமுண்டீஸ்வரிக்கு தெரிய வந்தால் என்ன நடக்கும்? சந்திரகலாவின் திட்டம் வெற்றிபெறுமா, இல்லை கடைசி நேரத்தில் ஏதாவது திருப்பம் உண்டாகுமா? இந்த பரபரப்பான கேள்விகளுக்கான பதில்களை தெரிந்து கொள்ள, தவறாமல் பாருங்கள் கார்த்திகை தீபம் இன்று இரவு 9 மணிக்கு உங்கள் Zee தமிழில் பாருங்கள்.