சென்னை: அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். அந்தப் படத்தை அவரே தயாரிக்கவிருப்பதாகவும் ஒரு தகவல் ஓடுகிறது. அவருக்கு துணையாக இருக்க ஷாலினியும் சினிமாவில் ரீ என்ட்ரி தரவிருக்கிறாராம். ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ரூமுக்காக ரன்வீர் சிங் சண்டையிட்ட சூழலில்; அதை அஜித் கூலாக ஹேண்டில் செய்திருக்கிறார்.

Advertisement

சினிமாவிலிருந்து விஜய் ஒதுங்கிவிட்டார். அவருக்கு போட்டியாக இருந்த அஜித்தோ பெரும்பாலான கவனத்தை கார் ரேஸ் பக்கம் திருப்பியிருக்கிறார்.கடந்த வருடத்தில் அவர் மொத்தம் இரண்டு திரைப்படங்களில் நடித்தார். ஆனால் இரண்டு படங்களுமே சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியை பெறவில்லை. குட் பேட் அக்லியை ஏகே ரசிகர்கள் மட்டும் கொண்டாடினாலும்; பலருக்கு பிடிக்கவில்லை. அதேசமயம் வசூலில் நூறு கோடி ரூபாயை அள்ளியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Photo Credit:

கார் ரேஸில்: ஒரு வருடத்தில் இரண்டு படமெல்லாம் அஜித் நடிப்பது அபூர்வம். அப்படி அவர் அபூர்வமான செயலை செய்ததற்கு காரணம் கார் ரேஸ். பந்தயத்தில் கலந்துகொள்ளும் முன்பு தனக்கு இருக்கும் சினிமா கமிட்மென்ட்டுகளை முடிப்பதற்காகவே அவர் அப்படி செய்தார். திட்டமிட்டபடி படங்களை முடித்துக்கொடுத்துவிட்டு உலகம் முழுவதும் நடக்கும் கார் ரேஸில் தன்னுடைய டீமுடன் தவறாமல் கலந்துகொண்டு பரிசுகளையும் வென்றுவருகிறார் ஏகே.

Advertisement

அடுத்த படம்: கார் ரேஸில் கவனம் இருந்தாலும் சினிமாவையும் அவர் முழுவதுமாக விடவில்லை. அடுத்ததாகவும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். ஆனால் ஏகேவின் கடைசி இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதாலும்; அஜித் கேட்கும் சம்பளம்; மார்க்கெட்டைவிட அதிகம் இருப்பதாகவும் கூறி யாரும் தயாரிக்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. அதனால், அந்தப் படத்தை தானே தயாரிக்கும் திட்டத்தையும் ஏகே கையில் எடுத்திருக்கிறாராம்.

ஆகஸ்ட்டில் அறிவிப்பு?: அஜித் தயாரிக்கும்பட்சத்தில்; இணை தயாரிப்பாளராக ஷாலினி பொறுப்பேற்பார் என்றும்; அவர்தான் முழுக்க முழுக்க தயாரிப்பு பணிகளை கவனிக்கவிருப்பதாகவும் அடித்து சொல்கிறார்கள் கோடம்பாக்கத்தினர். அநேகமாக படம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்களும், அறிவிப்புகளும் ஆகஸ்ட் மாதம் வரலாம் என்று தெரிகிறது. சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆதிக் ரவிச்சந்திரனும்கூட அதைத்தான் சொல்லியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் தயாரிப்பாளர் ராகுல் அளித்திருக்கும் பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அவர் அந்தப் பேட்டியில், "ஹைதரபாத் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் ஷூட்டிங் நடந்தது. அஜித் ஒரு ஹோட்டல் ரூமில் தங்கியிருந்தார். ஆனால் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் வந்தால் அங்கேதான் தங்குவாராம். அப்படி ஒருமுறை அவர் வந்தபோது; அந்த ரூம்தான் எனக்கு வேண்டும் என ரன்வீர் கேட்பதாக என்னிடம் சொன்னார்கள்.

கூலாக ஹேண்டில் செய்த ஏகே: நான் உடனே, 'நாங்கள் காலி செய்ய முடியாது. ஏன் ரன்வீர் சிங் இங்கேதான் தங்குவாரா? அவருக்காக நாங்கள் எங்கள் அஜித் சாரை ரூமை விட்டு செல்ல சொல்ல வேண்டுமா? என கேட்டுவிட்டேன். இருந்தாலும் இந்த விஷயத்தை அஜித்திடம் சொன்னேன். அவரோ உடனே, 'ஏன் அவரே வந்து தங்கிக்கொள்ளட்டும்' என சொல்லி; தன் உதவியாளரை அழைத்து, 'உடனே லக்கேஜை எல்லாம் எடுத்துக்கொண்டு கிளம்பு' என சொல்லிவிட்டார். நான் அவரிடம், வெளியே ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் இருக்கிறது என கூறினேன். அதற்கு அவரோ, ஏன் அதெல்லாம்; எனக்கு ஒரு பெட் இருந்தால் போதும் என சொல்லிவிட்டார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது" என்றார்.