சென்னை: இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் பாலா. அவர் இப்போது ஃபார்ம் அவுட்டில் இருந்தாலும்; அவர் இயக்கிய பல படங்கள் இன்னமும் ஃபார்மில்தான் இருக்கின்றன. கடைசியாக இயக்கிய வணங்கான் படம் சொதப்பிவிட்டதுதான். இருப்பினும் அவர் மீண்டும் ஒரு கம்பேக் கொடுப்பார் என்றே அவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துவருகிறார்கள். இந்நிலையில் அவரது இயக்கத்தில் சிவாஜியும், அஜித்தும் சேர்ந்து ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தார்கள்.

Advertisement

சேது படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் பாலா. அந்தப் படம் காதல் கதைதான் என்றாலும்; அதில் எமோஷனை பாலா கையாண்டிருந்த விதமும், விக்ரமின் நடிப்பும், பாலாவின் மேக்கிங்கும் அசாதாரணமாக இருந்தது. அதிலும் படத்தின் இரண்டாவது பாதி முழுக்க ஒருவித துக்கம் படத்தை பார்க்கும்போது தொண்டையை அடைக்கும். முக்கியமாக க்ளைமேக்ஸ் காட்சியை பார்த்து இப்போதும் கலங்கும் பலர் இருக்கிறார்கள். இதுபோன்ற விஷயங்களால் அந்தப் படம் காதல் காவியமாக மாறியிருக்கிறது.

Advertisement

Photo Credit:

முக்கியமான இயக்குநர்: அந்தப் படத்திலிருந்தே தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநராக மாறிவிட்டார் பாலா. தொடர்ந்து அவர் இயக்கிய நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி உள்ளிட்ட படங்கள் எல்லாம் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி சென்றிருக்கின்றன. அவற்றில் சில படங்கள் தோல்வியை சந்தித்திருந்தாலும்; பாலா படம் என்பதாலேயே சிலரால் ரசிக்கப்பட்டதும் நடந்தது. ஃபுல் ஃபார்மில் சென்றுகொண்டிருந்த அவருக்கு சில பிரச்னைகள் ஏற்பட; மார்க்கெட் இறங்குமுகமாக மாறியது.

Advertisement

வணங்கானும் தோல்வி: கடைசியாக அவர் அருண் விஜய்யை வைத்து வணங்கான் படத்தை இயக்கியிருந்தார். பெரிய எதிர்பார்ப்புடன் வந்த படம் புஸ்வானமாகி போனது. மாற்று திறனாளிகளை அவர் காட்சிப்படுத்திய விதம் ரசிக்கும்படி இல்லை. ஏற்கனவே அப்படத்தில் சூர்யாதான் ஹீரோவாக கமிட்டானார். ஆனால் அவர் விலகிவிட்டதும் நடந்தது. வணங்கான் தோல்வியடைந்தாலும்; அடுத்த படத்தில் அவர் கண்டிப்பாக கம்பேக் கொடுத்துவிடுவார் என நம்புகிறார்கள் ரசிகர்கள்.

பாலாவின் நந்தா: அவர் இயக்கிய தனித்துவம் வாய்ந்த படங்களில் நந்தாவும் ஒன்று. அதுவரை ஈழ மக்கள் அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வருவதை பற்றி பெரிதாக திரையில் பேசியதில்லை. பாலா அதனை தைரியமாகவும், நேர்மையாகவும் செய்தார். ஈழ மக்களுக்கு உதவும் பெரியவர் கேரக்டரில் ராஜ்கிரணை நடிக்க வைத்திருந்தார். அவரும் தரமான நடிப்பையே வெளிப்படுத்தியிருந்தார். இன்றுவரை அவர் ஏற்றிருந்த கேரக்டர்களில் பெரியவர் கேரக்டருக்கு முக்கியமான இடம் உண்டு. மேலும் சூர்யாவின் கரியரையும் நந்தாதான் மாற்றியது.

Advertisement

சிவாஜியும், அஜித்தும்: இந்நிலையில் நந்தா படத்துக்கு முதலில் ராஜ்கிரண் கேரக்டருக்கு சிவாஜியையும், சூர்யாவுக்கு பதில் அஜித்தையும் யோசித்து வைத்திருந்தாராம் பாலா. சிவாஜியை சந்தித்து கதையும் சொல்லியிருக்கிறார். ஆனால் அப்போது சிவாஜியின் உடல்நிலை சரியில்லாததால் அவரால் நடிக்க முடியவில்லை. அதேபோல் வேறு சில காரணங்களால் அஜித்தும் நடிக்க முடியாமல் போய்விட்டது. அந்தப் படத்துக்கு பிறகு நான் கடவுள் படத்திலும் பாலா - அஜித் இணைவதாக இருந்தார்கள். ஆனால் அதுவும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.