சென்னை: சில்க் ஸ்மிதாவின் தாக்கம் தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரியது. அதனால்தான் அவர் இறந்து இத்தனை வருடங்கள் ஆன பிறகும் அவரது இடத்தை இன்னொரு நடிகையால் பிடிக்க முடியவில்லை. அதுமட்டுமின்றி அவர் பற்றிய செய்திகளும், படங்களும் இன்னமும் ரசிகர்களுக்கு ஃபேவரைட்டான ஒன்றாகவே இருக்கிறது. இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் அவர் எவ்வளவு பெரிய வெற்றிடத்தை விட்டு சென்றிருக்கிறார் என்பதை. இந்நிலையில் அவர் குறித்து குஷ்பூ பேசிய வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.

Advertisement

இந்திய சினிமாவில் நடிகை சில்க் ஸ்மிதாவை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. 80ஸ் கிட்ஸ் தொடங்கி இப்போதைய 2கே கிட்ஸ்வரை அனைவருக்குமே அவர் ரொம்பவே ஃபேவரைட். டிவி சேனல்களில் இப்போதும் அவரது பாடல்களையோ அவர் நடித்த படங்களையோ போட்டால் கண் கொட்டாமல் பார்க்கும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதுமட்டுமின்றி நான் ஒரு சில்க்கின் ரசிகன் என்று மார்தட்டி பெருமையாக சொல்லும் ரசிகர்களும் இன்றுவரை உண்டு.

Advertisement

Photo Credit:

சில்க்கிடம் இருந்த ஸ்பெஷல்: கவர்ச்சி நடிகைகள் என்றாலே தங்களது உடல் அங்கங்களில் கவர்ச்சியை காட்டும் ஃபார்முலா மட்டும்தான் ஒருகாலத்தில் இருந்தது. ஆனால் சில்க் ஸ்மிதாவோ அப்படி இல்லை. தன்னுடைய உடல் அசைவுகள் மட்டுமின்றி பார்வை, பேச்சு உள்ளிட்டவைகளிலும் நளினத்தையும், மோகத்தையும் கூட்டி காட்டிய கவர்ச்சி அனைவரையும் கட்டிப்போட்டது. அதனால்தான் அவருடன் நடிக்க அத்தனை ஸ்டார் நடிகர்களும் வரிசையில் காத்திருந்தார்கள்.

தனிமையில் கொடுமையான சில்க்: சில்க் ஸ்மிதா சம்பாதிக்காத பணம் இல்லை; புகழ் இல்லை. ஆனால் அவர் தன்னை சுற்றி நல்ல மனிதர்களை மட்டும் சம்பாதிக்கவில்லை. இதன் காரணமாக அவர் தன்னைத்தானே சுற்றி ஒரு வேலி போட்டுக்கொண்டார். அந்த வேலியை கடந்து அவருக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே செல்வதற்கு அனுமதியுண்டு. மற்றவர்களை தூரத்திலேயே நிறுத்திவிடுவார். அதனை பலரும் தலைக்கனம் என்றும் சொன்னார்கள். அவர் அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை.

Advertisement

தவறாக நடக்க முயற்சி: அவர் ஒருவரை தீவிரமாக காதலித்ததாகவும்; அந்த நபராலேயே கடைசியில் ஏமாற்றத்தை சந்தித்ததால் சில்க் ஸ்மிதா மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டார் என்றும் பேச்சு உண்டு. அவரது உயிரிழப்பு அனைவருக்கும் பெரிய அதிர்ச்சியைத்தான் கொடுத்தது. முக்கியமாக மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலை காண்பதற்கு கூட்டம் அதிகளவு கூடியது மட்டுமின்றி; அந்த உடலை சிலர் தவறான கண்ணோட்டத்துடன் கையாண்ட கொடுமையும் நடந்திருக்கிறது.

ட்ரெண்டாகும் குஷ்பூ பேட்டி: அவர் மறைந்து கிட்டத்தட்ட 30 வருடங்களை கடந்துவிட்டாலும்; அவரது வாழ்க்கை வரலாறு படமானது; இனியும் படமாகப்போகிறது. இந்நிலையில் சில்க் குறித்து குஷ்பூ பேசியிருக்கும் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. அந்த வீடியோவில், "லுக்கிலும், உடலிலும் ரொம்ப கம்ஃபர்டபுளாக இருக்கும் நடிகை என்றால் சில்க் ஸ்மிதாதான். நான் அவரிடம் நிறைய ஈர்க்கப்பட்டிருக்கிறேன்.

Advertisement

நானும், அர்ஜுனும் நடித்த ஒரு படத்தில் அவரும் ஒரு ரோல் செய்திருந்தார். அந்த ஷூட்டிங்கில் எல்லோரும் மேடம் வரப்போறாங்க மேடம் வரப்போறாங்க என்று சொல்வார்கள். அப்போது யார் அந்த மேடம் என ஆச்சரியத்தோடு பார்க்கும்போது அவர் வருவார். அப்போது அவரை வாய் பிளந்து பார்த்திருக்கிறேன். நான் அப்படி பார்த்த ஒரே ஸ்டார் அவர் மட்டும்தான்" என்றார்.