சென்னை: நடிகர் திலகம் என கொண்டாடப்பட்ட சிவாஜி கணேசன் கடந்த 2001ஆம் ஆண்டு உயிரிழந்தார். சமீபத்தில்தான் அவரது 25வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மேலும் நூறாவது பிறந்தநாளை முதலமைச்சர் விஜய்யே முன்நின்று நடத்தி கொடுக்கவிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சிவாஜி தொடர்பான அரிதான வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கிறது.

Advertisement

பராசக்தி திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் சிவாஜி கணேசன். முதல் படமே பட்டித்தொட்டியெங்கும் ஹிட். அதன் காரணமாக சினிமாவில் சிவாஜிக்கும் வாழ்க்கை கிடைத்தது. தனக்கு கிடைத்த ஒவ்வொரு படத்திலும் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி; தன்னை ஒரு மிகச்சிறந்த நடிகராக மாற்றிக்கொண்டார். இப்போதுவரை பல நடிகர்களுக்கு அவர்தான் ரோல் மாடலாக திகழ்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கது. அந்த அளவுக்கு அவரது தாக்கம் இருக்கிறது.

Advertisement

Photo Credit:

சிவாஜி ஓவர் ஆக்டிங்கா?: அவர் நல்ல நடிகர் என்று எவ்வளவு பெயர் எடுத்தாரோ அதேபோல் ஓவர் ஆக்டிங் செய்யக்கூடிய நடிகர் என்றும் பெயர் எடுத்திருக்கிறார். ஆனால் அதனை பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்வதில்லை. நடிப்பே இல்லாமல் இருந்த காலகட்டத்தில் அவர் மிகையாக நடித்தது ஒன்றும் குற்றமில்லை; சிவாஜிக்கு தேவையானபடி கதையை உருவாக்கி நடிப்பை வாங்க இயக்குநர்கள் தவறிவிட்டார்கள் என்பது அவர்களது கருத்து. அது ஒருவகையில் உண்மையும்கூட.

ஏன் உண்மை?: உதாரணத்துக்கு தங்கப்பதக்கம் படத்தில் அவர் நடிப்பு செட் ஆகாதபோது; அதன் கதாசிரியர் இப்படி வேண்டாம் என்று கேட்க; உடனே அவர் தோளில் கை போட்ட சிவாஜி, எனக்கு இப்படித்தான் வேண்டும் என்று இதற்கு முன்பு இருந்தவர்கள் சொல்லியிருந்தால் நான் ஏன் இப்படி நடிக்கப்போகிறேன் என கேட்டிருக்கிறார். அதேபோல்தான் படையப்பா திரைப்படத்தில் நடித்தபோது கே.எஸ்.ரவிக்குமாரிடமும் அவர் சொல்லியிருக்கிறார். ஆக, சிவாஜி நீர் மாதிரி. எந்த பாத்திரத்தில் எப்படி ஊற்ற வேண்டும் என்பதை இயக்குநர்கள்தான் முடிவு செய்திருக்க வேண்டும்.

Advertisement

கூடிய விரைவில்: இதய நோய் காரணமாக கடந்த 2001ஆம் ஆண்டு உயிரிழந்தார் அவர். சமீபத்தில்தான் 25வது ஆண்டு நினைவுதினத்தில் அமைச்சர் ராஜ்மோகன், சிவாஜியின் மகனும், நடிகருமான பிரபு உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினார்கள். மேலும், இன்னும் இரண்டு வருடங்களில் அவருக்கு 100வது பிறந்தநாள் வருகிறது. அதனை தானே முன்நின்று நடத்தி தருவதாக விஜய்யும் உறுதியளித்திருக்கிறார். இந்நிலையில் சிவாஜியின் வீடியோ ஒன்று சென்சேஷனல் ஆகியிருக்கிறது.

Advertisement

என்ன வீடியோ?: அதாவது இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த சமயத்தில் அமெரிக்காவில் இருக்கும் தன் மகள் வீட்டுக்கு மனைவியுடன் சென்றிருந்தார் அவர். அப்போது வீட்டுக்கு வந்தவர்களிடம் தெருக்கூத்து கலையில் பாடப்படும் பாடலை மேஜையில் தாளம் தட்டிக்கொண்டே சிவாஜி பாடியிருக்கிறார். அதனை அனைவரும் மலைப்போடு பார்க்கிறார்கள். பாடி முடித்ததும், 'மூச்சு வாங்குதா மாமா' என மனைவி கமலா வாஞ்சையோடு கேட்கும் அரிதான காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றிருக்கின்றன.