சென்னை: திரிஷா நடிப்பில் கடந்த வருடம் வெளியான படங்களில் குட் பேட் அக்லி தவிர்த்து வேறு எந்த படமும் சரியாக போகவில்லை. ஆனால் இந்த வருடத்தில் அவர் நடிப்பில் வெளியான முதல் படமே மெகா ஹிட்டடித்திருக்கிறது. மொத்தம் 300 கோடி ரூபாய்வரை வசூலித்தது. அடுத்ததாக விஸ்வம்பரா உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன. இந்நிலையில் அவரது பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

Advertisement

திரிஷாவை பார்த்து பலரும் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால்; எப்படி இத்தனை வருடங்கள் ஒரு ஹீரோயின் அழகாகவும், முன்னணியிலும் இருக்க முடியும் என்பதுதான். கடந்த வருடத்தில் அவர் மூன்று படங்களில் நடித்தார். அந்தப் படங்களில் ஒரு படம் மட்டும் மெகா ஹிட்டடித்தது. மற்ற இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அடி வாங்கின. இருப்பினும் திரிஷாவுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன.

Advertisement

Photo Credit:

கருப்பு திரிஷா: இளம் ஹீரோயின்கள் படை இருந்தாலும் 43 வயது அழகி அவர்களுக்கு டஃப் கொடுக்கிறார். பெரிய பட வாய்ப்புகளையும் கணிசமாக பெறுகிறார். அந்தவகையில் சூர்யாவுக்கு ஜோடியாக கருப்பு படத்தில் நடித்தார். ஆர்.ஜே. பாலாஜி இயக்கியிருந்த அந்தப் படம் கடந்த மாதம் வெளியானது. பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி பெரிய ஹிட்டடித்திருக்கிறது. உலகம் முழுவதும் மொத்தம் 300 கோடி ரூபாய்வரை வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வந்தது.

திரிஷாவுக்கு செம பெயர்: படத்தில் திரிஷாவுக்கு நல்ல பெயரே கிடைத்திருக்கிறது. கதைக்கு தேவையான நடிப்பை வழங்கிய அவர்; பார்ப்பதற்கு 20 வயது மாதிரி படத்தில் இருக்கிறார் என கொண்டாடுகிறார்கள். குறிப்பாக விஜய், அஜித், சூர்யா ஆகிய மூன்று பேருக்கும் அதிகம் வசூல் செய்த படங்களின் ஹீரோயின் திரிஷாதான் என்பது குறிப்பிடத்தக்கது. அதுகுறித்த ஒரு ஸ்டோரியைகூட அவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் பகிர்ந்திருந்தார்.

Advertisement

ட்ரெண்டாகும் பேட்டி: அடுத்ததாக சிரஞ்சீவியுடன் நடித்திருக்கும் விஸ்வம்பரா திரைப்படம் வரவிருக்கிறது. இந்நிலையில் அவரது பேட்டி ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. மிஸ் சென்னை பட்டம் வென்று சினிமாவுக்குள் நுழைந்த சமயத்தில் கொடுத்திருந்த பேட்டியில், மாடலிங்கில் இருந்தபோது கண்டிப்பாக நான் சினிமா துறைக்கு வரமாட்டேன் என பல முறை சொல்லியிருக்கிறேன். அப்போது அப்படி சொல்லிவிட்டு இப்போது நடிக்க வந்துவிட்டீர்களே என நிறைய பேர் கிண்டல் செய்தார்கள்.

குழப்பமாக இருந்தது: எப்படி முடிவை மாற்றிக்கொண்டாய் என்றும் கேட்டார்கள். சிம்ப்பிள்தான்; அப்போது என்ன வேண்டும் என்று எனக்கு சரியாக தெரியவில்லி. குழப்பத்தில்தான் இருந்தேன். படங்களில் நடிக்க வேண்டுமா இல்லை படிப்பை தொடரலாமா என்று தோன்றியது. முதலில் படிப்பை முடித்த பிறகு படங்களில் நடிக்கலாம் என்று நினைத்தேன். மற்றபடி சினிமாவில் ஆர்வம் இல்லாமல் இல்லை" என்றார்.