அப்படி என்னதான் தேடறாங்களோ... லக்ஸ் அரங்குகளில் மூன்றாம் நாளாக சினிமா காட்சிகள் ரத்து!
சென்னை: ஜாஸ் சினிமா நிறுவனத்துக்குச் சொந்தமான வேளச்சேரி லக்ஸ் திரையரங்குகளில் மூன்றாம் நாளாக காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சசிகலா குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தினகரன் ஆதரவாளர்கள் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் ஒன்றையும் விடாமல் 2000க்கும் மேற்பட்ட வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

வியாழக்கிழமை தொடங்கிய இந்த சோதனை இன்று மூன்றாவது நாளாகத் தொடர்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடக்கிறது. சோதனை நடக்கும் முக்கிய இடங்களில் ஒன்றாக சசிகலா அண்ணி மகன் விவேக் நடத்தும் ஜாஸ் சினிமா மற்றும் லக்ஸ் திரையரங்குகள்.

வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலில் உள்ளன லக்ஸ் அரங்குகள். ஜாஸ் சினிமா அலுவலகம் கிண்டியில் உள்ளது. இந்த இரு இடங்களிலும் சோதனை தொடர்வதால் லக்ஸ் சினிமா மூடப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்று நாட்களாக காட்சிகள் ரத்து செய்யப்பட்டதால், பல கோடி இழப்பை ஜாஸ் சினிமா சந்தித்துள்ளது.


Click it and Unblock the Notifications











