ஜோதா அக்பருக்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிலிம்ஃபேர் விருது
ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விருது மாலை தொடர்ந்து விழுந்து கொண்டிருக்கிறது. ஜோதா அக்பர் படத்திற்கு சிறப்பாக இசையமைத்தற்காக அவருக்கு பிலிம்ஃபேர் விருது கிடைத்துள்ளது. அதேபோல கஜினி நாயகி அசினுக்க சிறந்த புதுமுக நடிகைக்கான விருது கிடைத்துள்ளது.
ஜோதா அக்பருக்கு மொத்தம் 5 விருதுகள் கிடைத்துள்ளன. ஐஸ்வர்யா ராய், ஹிரித்திக் ரோஷன் நடிப்பில் வெளியான படம் ஜோதா அக்பர்.
இந்த நிலையில் 54வது பிலிம்ஃபேர் விழாவில் இப்படம் ஐந்து விருதுகளை தட்டிச் சென்றது. மும்பையில் நேற்று நடந்த விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன.
ஜோதா அக்பருக்கு சிறந்த இசை, சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர் (ஆசுதோஷ் கோவரிகர்) மற்றும் சிறந்த பாடலுக்கான விருதுகள் கிடைத்துள்ளன.
சிறந்த புதுமுக நடிகையாக அசின் தேர்வு பெற்றார். கஜினி படத்தில் கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இந்த விருதைப் பெற்றுள்ளார் அசின்.
கஜினி படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்து.


Click it and Unblock the Notifications











