கவிஞர் வாலிக்கு அண்ணா விருது: பையனூர் விழாவில் ராம.நாராயணன் வழங்கினார்

ஒவ்வொரு ஆண்டும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் பேரறிஞர் அண்ணா விருது வழங்குவது வழக்கம். இந்த ஆண்டிற்கான விருதிற்கு கவிஞர் வாலி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சென்னை அருகே உள்ள பையனூரில் இந்த விருது வழங்கும் விழா சிறப்பாக நடந்தது. இதற்கு கலைஞானம் முன்னிலை வகித்தார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம.நாராயணன் கவிஞர் வாலிக்கு பேரறிஞர் அண்ணா விருதை வழங்கி கௌரவித்தார். இந்த விழாவில் பெப்சி' தலைவர் வி.சி.குகநாதன் கவிஞர் வாலியை வாழ்த்திப் பேசினார்.
மேலும், இதில் கவிஞர்கள் பூவை செங்குட்டுவன், மு.மேத்தா, காமகோடியன், யார் கண்ணன், நா.முத்துக்குமார், கபிலன், விவேகா, ஆண்டாள் பிரியதர்ஷினி தாமரை, வசனகர்த்தா லியாகத் அலிகான், ஆஞ்சனேயா புஷ்பானந்த், டி.துரைராஜ் ஆகியோர் கலந்துகொண்டு வாலியை வாழ்த்தி கவிதை மழை பொழிந்தனர்.
இதில் நடிகர்கள் சத்யராஜ், கரண், ராஜேஷ், நடிகை தேவயானி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். முன்னதாக வசனகர்த்தா கே.குணா வரவேற்புரை ஆற்றினார். இறுதியாக டைரக்டர் எழில் நன்றியுரை வாசித்தார்.


Click it and Unblock the Notifications