பூ படத்துக்கு அகமதாபாத் திரைப்பட விழா விருது

விமர்சகர்களின் பெரும் பாராட்டைப் பெற்ற படம் பூ. முதல் படத்திலேயே முத்திரை பதிக்கும் வகையில் நடித்திருந்தார் படத்தின் நாயகி பார்வதி. இயக்குநர் சசியின் இயக்கத் திறமைக்கு இது பெரும் பாராட்டைப் பெற்றுக் கொடுத்தது.
இந்தப் படம் அகமதாபாத்தில் நடந்த திரைப்பட விழாவில் கலந்து கொண்டது. அங்கு பூ படம் சிறந்த படமாக தேர்வாகியுள்ளது.
அதேபோல இயக்குநர் சசி சிறந்த இயக்குநருக்கான ஜூரி விருதைப் பெற்றுள்ளார்.
அகமதாபாத் திரைப்பட விழாக் கழகம் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
Comments
ahamadabad film fest award அகமதாபாத் திரை விழா சினிமா தமிழ் பார்வதி பூ விருது ஸ்ரீகாந்த் cinema parvathy poo srikanth


Click it and Unblock the Notifications