twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பூ படத்துக்கு அகமதாபாத் திரைப்பட விழா விருது

    By Staff
    |

    Srikanth with Parvathy
    சசி இயக்கத்தில், ஸ்ரீகாந்த், பார்வதி ஆகியோரது நடிப்பில் உருவான பூ படத்துக்கு அகமதாபாத் திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான விருது கிடைத்துள்ளது.

    விமர்சகர்களின் பெரும் பாராட்டைப் பெற்ற படம் பூ. முதல் படத்திலேயே முத்திரை பதிக்கும் வகையில் நடித்திருந்தார் படத்தின் நாயகி பார்வதி. இயக்குநர் சசியின் இயக்கத் திறமைக்கு இது பெரும் பாராட்டைப் பெற்றுக் கொடுத்தது.

    இந்தப் படம் அகமதாபாத்தில் நடந்த திரைப்பட விழாவில் கலந்து கொண்டது. அங்கு பூ படம் சிறந்த படமாக தேர்வாகியுள்ளது.

    அதேபோல இயக்குநர் சசி சிறந்த இயக்குநருக்கான ஜூரி விருதைப் பெற்றுள்ளார்.

    அகமதாபாத் திரைப்பட விழாக் கழகம் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X