ராதிகா-குஷ்புவுக்கு விருது; 70 படங்களுக்கு ரூ.5 கோடி மானியம்!

By Staff

Kushboo and Trisha
நடிகைகள் ராதிகா, குஷ்பு உள்ளிட்ட திரைக் கலைஞர்களுக்கு கலைத்துறை வித்தகர் வழங்குகிறார் தமிழக முதல்வர் கருணாநிதி. வரும்ற 8ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ள விழாவில் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.

தமிழக அரசு ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள், திரையுலகில் சாதனை புரிந்தவர்களுக்கு கலைத்துறை வித்தகர் விருதுகள் மற்றும் திரைப்படக் கல்லூரி மாணவர் விருதுகளை வழங்கி வருகிறது.

அதேபோல சிறந்த சின்னத்திரைத் தொடர்கள், வாழ்நாள் சாதனையாளர்கள், நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கும் திட்டத்தை 2006ம் ஆண்டு அரசு அறிமுகம் செய்தது.

இதன்படி, நடிகைகள் ராதிகா, குஷ்பு, திருச்செல்வம், அபிஷேக் உட்பட 22 சின்னத்திரை கலைஞர்களுக்கான விருதுகளை கருணாநிதி வழங்குகிறார்.

மேலும் 2005 மற்றும் 2006ம் ஆண்டுகளில் குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட தரமான தமிழ் படங்களுக்கு அரசு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 70 படங்களுக்கு மொத்தம் ரூ.4.9 கோடியையும் வழங்குகிறார் முதலமைச்சர் கருணாநிதி.

இதற்கான விழா வரும் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X