பிலிம்பேர் விருது பட்டியலில் ரஜினி-நயன்

சிவாஜியில் சிறப்பாக நடித்தமைக்காக ரஜினியும், பில்லாவுக்காக அஜீத் மற்றும் நயன்தாராரவும் போக்கிரி படத்துக்காக விஜய்யும் சிறந்த நடிகர் நடிகைக்கான விருதுக் குழுவின் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களைத் தவிர, ஒன்பது ரூபாய் நோட்டுக்காக சத்யராஜூம், இதே படத்துக்காக அர்ச்சனாவும், கல்லூரி படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக தமன்னாவும், மொழி படத்துக்காக ஜோதிகாவும், பருத்தி வீரனுக்காக ப்ரியாமணியும் தேர்வுக் குழுப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் விருதுக்குரியவர் யார் என்பதை தேர்வுக் குழுவினர் இன்னும் சில தினங்களில் இறுதி செய்வார்கள். அடுத்த மாதம் சென்னையில் விருது வழங்கும் விழா நடக்கிறது.
Comments


Click it and Unblock the Notifications