இன்று 82வது ஆஸ்கர் விருது விழா - வெற்றி யாருக்கு?

By Staff

Avatar
அகாடமி விருது எனப்படும் ஆஸ்கர் விருது பெறுவோரின் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. இந்திய நேரப்படி நாளை அதிகாலை இந்த விழாவை தொலைக்காட்சிகள் மூலம் நேரடியாக காணலாம்.

இது 82வது அகாடமி விருது விழாவாகும். இந்த விருது விழா பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுதும் உள்ள திரை ரசிகர்களை பிரமிக்க வைத்த அவதார் படம் விருதுகளை அள்ளிச் செல்லும் என பெருவாரியாக எதிர்பார்க்கப்படுகிறது.

லாஸ் ஏஞ்சலெஸில் ஆஸ்கர் விழாவுக்கான ஏற்பாடுகள் களை கட்டியுள்ளன. இந்திய நேரப்படி நாளை அதிகாலை விழாவை நாம் காணலாம்.

சிறந்த நடிகர் விருதுக்கு ஜெப் பிரிட்ஜஸ், ஜார்ஜ் க்ளூனி, காலின் பிர்த், மார்கன் ப்ரீமேன், ஜெரீமி ரென்னர் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

சிறந்த நடிகைக்கான விருதுக்கு சான்ட்ரா புல்லக், ஹெலின் மிர்ரன், கேரி முல்லிகன், காட்பரி சிதிபி, மெரைல் ஸ்டிரீப் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

சிறந்த இயக்குநருக்கான விருதுக்கு ஜேம்ஸ் காமரூன் (அவதார்), கேத்தரின் பிக்ளோ (தி ஹர்ட் லாக்கர்) குவின்டின் டாரன்டினோ (இங்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ்), லீ டேணியல்ஸ், ஜேசன் ரீட்மேன் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இதில் கேத்தரின், ஜேம்ஸ் காமரூனின் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

அவதார் படம் சிறந்த கலை இயக்கம், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இயக்கம், சிறந்த எடிட்டிங், சிறந்த இசை, சிறந்த படம், சிறந்த ஒலிப்பதிவு, சிறந்த ஒலிக் கலவை, சிறந்த விஷூவல் எபக்ட்ஸ் ஆகிய 9 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த முறை ஆஸ்கர் விருதுகள் இந்தியர் யாருக்கும் கிடைக்கும் வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. கடந்த ஆண்டு நடந்த விழாவின்போதுதான் ஏ.ஆர்.ரஹ்மான் 2 ஆஸ்கர்களையும், ரசூல் பூக்குட்டி, குல்சார் ஆகியோர் தலா ஒரு விருதையும் அள்ளி வந்தனர் என்பது நினைவிருக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X