twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காஞ்சிவரம் படத்துக்கு தேசிய விருது-சிறந்த நடிகர்-பிரகாஷ் ராஜ்

    By Staff
    |

    Shreya Reddy with Prakash Raj in Kanchivaram
    2007ம் ஆண்டில் நாட்டின் மிகச் சிறந்த திரைப்படமாக காஞ்சிவரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இந்தப் படத்தில் நடித்த பிரகாஷ் ராஜுக்கு 2007ம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

    அடூர் கோபால கிருஷ்ணன்…

    பிரபல மலையாள இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் நாலு பெண்கள் படத்துக்காக சிறந்த இயக்குநர் விருது பெறுகிறார்.

    கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படவிருந்த நாட்டின் 55வது திரைப்பட தேசிய விருதுகள் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மரணத்தையடுத்து ஒத்தி வைக்கப்பட்டு, இன்று அறிவி்க்கப்பட்டன.

    இதில் பிரகாஷ் ராஜுக்கு மிகச் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கிய இந்தப் படத்தில் ஒரு ஏழை நெசவாளனின் வாழ்க்கையை தனது நடிப்பால் மிக அழகாக பதிவு செய்திருந்தார் பிரகாஷ் ராஜ். அவருக்கு ஷ்ரேயா ரெட்டி ஜோடியாக நடித்திருந்தார்.

    சுதந்திரத்துக்கு முன் காஞ்சி நெசவாளர்களின் நிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டியிருந்தார் ப்ரியதர்ஷன்

    கடந்த 1998ம் ஆண்டு இருவர் படத்தில் நடித்ததற்காக சிறந்த இணை நடிகருக்கான விருதையும், 2003ம் ஆண்டு நடுவர்களின் சிறப்பு விருதையும் பிரகாஷ் ராஜ் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    சிறந்த நடிகை உமாஸ்ரீ:

    கன்னடத்தில் இயக்குனர் கிரிஷ் காசரவல்லி இயக்கிய குலாபி டாக்கீஸ் படத்தில் நடித்த உமாஸ்ரீக்கு சிறந்த நடிக்கைகான தேசிய விருது கிடைத்துள்ளது.

    சிறந்த குழந்தை நட்சத்திரமாக தின்கயா என்ற மராட்டியப் படத்தில் நடித்த சரத் கோயகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    தாரே ஜமீன் பர்...:

    ஷாருக் கானின் சக் தே இன்டியா மிகச் சிறந்த பொழுதுபோக்குப் படமாகவும், அமீர் கானின் தாரே ஜமீன் பர் சிறந்த குடும்ப நல படமாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    சிறந்த பாடகர் சங்கர் மகாதேவன்:

    தாரே ஜமீன் பர் படத்தில் மேரி மா என்ற பாடலைப் பாடிய சங்கர் மகாதேவன் சிறந்த பின்னணிப் பாடகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    காந்தி மை பாதர் படத்துக்கு 3 விருதுகள்:

    அனில் கபூர் தயாரிப்பு மற்றும் நடிப்பி்ல உருவான காந்தி மை பாதர் படத்துக்கு 3 விருதுகள் கிடைத்துள்ளன.

    சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை (பெரோஸ் அப்பாஸ்), சிறந்த துணை நடிகர் (தர்ஷன் ஜாரிவாலா) ஆகிய விருதுகள் காந்தி மை பாதர் படத்துக்குக் கிடைத்துள்ளன.

    சாய் பராஞ்பே தலைமையில் அசோக் விஸ்வநாதன், நமிதா கோகலே உள்ளிட்டோர் அடங்கிய நடுவர் குழு சுமார் 102 திரைப் படங்கள், 106 டாகுமென்டரிப் படங்களில் இருந்து இந்தப் படங்களை தேசிய விருதுக்கு தேர்வு செய்துள்ளது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X