twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தேசிய விருது: சிறந்த தமிழ் படம் பெரியார்'

    By Staff
    |

    Periyar wins national award for best Tamil film
    மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகம் சார்பில் 2007ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

    இதி்ல் காஞ்சிவரம்' படத்துக்கு சிறந்த படத்துக்கான விருதும், அதில் நடித்த பிரகாஷ் ராஜுக்கு சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்துள்ளது.

    சிறந்த தமிழ் படம் பெரியார்':

    பிராந்திய மொழி படங்களில், தமிழில் சிறந்த படத்துக்கான விருது சத்யராஜ் நடித்த பெரியார்' படத்துக்கு கிடைத்துள்ளது.

    லிபர்ட்டி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தை ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஞானராஜசேகரன் இயக்கியிருந்தார். இவர் இயக்கிய மோகமுள்' படத்திற்கும் ஏற்கனவே விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

    இந்தியில் 1971', மலையாளத்தில் ஒரே கடல்', மராத்தியில் நிரோப்', வங்க மொழியில் பாலிகஞ்ச் கோர்ட்' ஆகிய படங்களுக்கும் சிறந்த பிராந்திய மொழி படங்களுக்கான விருது கிடைத்துள்ளது. ஆங்கிலத்தில் தி லாஸ்ட் லியர்' படத்துக்கு விருது கிடைத்துள்ளது.

    சிறந்த கார்ட்டூன் படம்-இனிமே நாங்கதான்':

    அதே போல தேசிய அளவில் சிறந்த கார்ட்டூன் (அனிமேஷன்) படமாக இனிமே நாங்கதான்' என்ற தமிழ் படம் தேர்வு செய்யப்பட்டு விருது கிடைத்துள்ளது. 4 நண்பர்கள் ஒரு குகைக்குள் புதையலை தேடிச்செல்லும் காட்சிகளை சித்தரிக்கும் இந்த படத்தை மாயா பிம்பம் பட நிறுவனத்தின் சார்பில் ஸ்ரீதேவி தயாரித்திருந்தார்.

    ஸ்பெஷல் எபெக்ட்ஸ் காட்சிகளுக்கான விருது ரஜினி நடித்த சிவாஜி'யில் பணிபுரிந்த மெசர்ஸ் இந்தியன் ஆர்ட்டிஸ்ட் குழுவினருக்கு கிடைத்துள்ளது.

    சிறந்த பின்னணி பாடகிக்கான விருது, ஜாப் வி மெட்' என்ற படத்திற்காக ஸ்ரேயா கோஷாலுக்கு கிடைத்துள்ளது. இந்த படத்தில் இடம்பெற்ற ஏ இஷா ஹை' என்ற பாடலுக்கு சிறந்த நடனக் காட்சிக்கான விருது வழங்கப்படுகிறது.

    தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் விருது, பவனா தல்வார் இயக்கிய மதங்களின் அடிப்படையை மையமாக கொண்ட தர்ம்' என்ற படத்துக்கு வழங்கப்படுகிறது.

    தங்கர்பச்சான் ஆவேசம்:

    பெரியார் படத்துக்கு சிறந்த பிராந்திய மொழி பட விருதை விட பெரிய விருது கிடைத்திருக்க வேண்டும் என்று இயக்குனர் தங்கர்பச்சான் கூறியுள்ளார்.

    அவர் கூறுகையில், பெரியார் பிராந்திய எல்லைகளை எல்லாம் கடந்தவர். அவரது வாழ்க்கையை சித்தரித்த படத்துக்கு பிராந்திய மொழி விருதை மட்டும் வழங்கியது ஏமாற்றமே தருகிறது.

    நான் இயக்கிய 9 ரூபா நோட்டு படத்துக்கே சத்யராஜுக்கு தேசிய விருது தரப்பட்டிருக்க வேண்டும். தேசிய விருது பெற மிகத் தகுதியுள்ள கலைஞன் சத்யராஜ்.

    அதே நேரத்தில் காஞ்சிவரம் படத்தில் பிரகாஷ் ராஜ் மிகச் சிறப்பாக செய்திருந்தார். அவருக்கு விருது தந்ததும் பொறுத்தமானதே என்றார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X