twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நயன், நமீதா, ரஜினிக்கு விருது

    By Staff
    |

    Kushboo with Satyaraj in Periyar
    சத்யராஜ் நடித்த பெரியார் படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதி்ல் நடித்த சத்யராஜுக்கு சிறந்த குணசித்திர நடிகர் விருதும், குஷ்புவுக்கு சிறந்த குணசித்திர நடிகை விருதும் வழங்கப்படுகிறது.

    சினிமா ரசிகர்கள் சங்கம் சார்பில் சிறந்த நடிகராக ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த நடிகையாக நயனதாரா (!) நமீதாவுக்கு (!!) விருது வழங்கப்படுகிறது.

    சிவாஜி திரைப்படத்துக்கு சிறந்த படத்துக்கான சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    கிரீடம் படத்தில் நடித்த அஜீத், நான் அவனில்லை படத்தின் நாயகன் ஜீவன் ஆகியோருக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்படுகின்றன.

    சினிமா ரசிகர்கள் சங்கம் முன்னாள் நீதிபதி ஜெகதீசன் தலைமையில் சென்னையில் இயங்கிவருகிறது.

    இந்த அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வுசெய்து, விருது வழங்கப்பட்டு வருகிறது.

    2007ம் ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியலை முன்னாள் நீதிபதி ஜெகதீசன் தலைமையில், முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் முன்னிலையில் சினிமா ரசிகர்கள் சங்க செயலாளர் பார்த்தசாரதி வெளியிட்டார்.

    இதில் சிறந்த நடிகராக ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிவாஜி படத்தில் சிறப்பாக நடித்ததத்றாக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.

    பில்லா படத்தில் நடித்த நயன்தாரா சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    விருதுக்கு தேர்வாகியுள்ள கலைஞர்கள் முழுப் பட்டியல்:

    சிறந்த படம் சிறப்பு விருது- சிவாஜி

    சிறந்த படம்- பெரியார்

    சிறந்த தயாரிப்பாளர்- ஆஸ்கார் ரவிச்சந்திரன்

    சிறந்த நடிகர்- ரஜினி (சிவாஜி)

    சிறந்த நடிகர் (சிறப்பு விருது)- அஜீத் (பில்லா)

    சிறந்த நடிகர் (சிறப்பு விருது-2) - ஜீவன் (நான் அவனில்லை)

    சிறந்த நடிகை- நயன்தாரா (பில்லா)

    சிறந்த நடிகை (சிறப்பு விருது)- திரிஷா (கிரீடம்)

    சிறந்த நடிகை (சிறப்பு விருது-2) - நமீதா (நான் அவனில்லை)

    சிறந்த நடிகை (சிறப்பு விருது-3) - மாளவிகா (நான் அவனில்லை)

    சிறந்த குணசித்திர நடிகர்- சத்யராஜ் (பெரியார்)

    சிறந்த குணசித்திர நடிகை- குஷ்பு (பெரியார்)


    சிறந்த புதுமுக நடிகர்- வினய் (உன்னாலே உன்னாலே)

    குடும்ப நல படம்- உன்னாலே உன்னாலே

    சிறந்த டைரக்டர்- விஷ்ணுவர்தன் (பில்லா)

    சிறந்த கதை- கிரீடம் (டைரக்டர் விஜய்)

    சிறந்த பாடலாசிரியர்- நா.முத்துக்குமார் (உற்சாகம்)

    சிறந்த இசையமைப்பாளர்- யுவன் சங்கர்ராஜா (பில்லா)

    சிறந்த ஒளிப்பதிவாளர்- நீரவ்ஷா (பில்லா)

    சிறந்த துணை நடிகை- மனோரமா (பெரியார்)

    சிறந்த பின்னணி பாடகர்- கிரிஷ் (உன்னாலே உன்னாலே)

    சிறந்த பின்னணி பாடகி- சின்மயி (சிவாஜி)

    அக்டோபர் மாதம் 12-ம் தேதி இந்த விருது வழங்கும் விழா சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறுகிறது.

    இதேபோல், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் சிறந்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X