ஷாருக், தீபிகா, கரீனாவுக்கு விருது

By Staff

Deepika Padukone
பாங்காக்: ஷாருக்கான் நடித்த சக் தே இந்தியா படத்திற்கு 9வது இந்தியா சர்வதேச திரைப்பட அகாடமியின் 9 விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த புதுமுக நடிகைக்கான விருதினை தீபிகா படுகோன் தட்டிச் சென்றார்.

இந்தியா சர்வதேச திரைப்பட அகாடமியின் 9வது விருது வழங்கும் விழா பாங்காக்கில் நடந்தது.

இதில் ஷாருக்கான் நடித்த சக் தே இந்தியா 9 விருதுகளை அள்ளியது. இன்னொரு ஷாருக் படமான ஓம் சாந்தி ஓம் 5 விருதுகளைப் பெற்றது.

சிறந்த நடிகருக்கான விருது சக் தே இந்தியா படத்தில் நடித்த ஷாருக்கானுக்கு கிடைத்தது. சிறந்த நடிகைக்கான விருதினை ஜப் வி மெட் படத்தில் நடித்த கரீனா கபூர் பெற்றார்.

அக்ஷய் குமாருக்கு சிறப்பு அங்கீகார விருது வழங்கப்பட்டது. தாய்லாந்து நாட்டின் சார்பில் இந்த விருது அளிக்கப்பட்டது. தாய்லாந்தில் 20 ஆண்டுகளுக்கு ஹோட்டலில் சர்வராக வேலை பார்த்தவர் அக்ஷ்ய் குமார் என்பது நினைவிருக்கலாம்.

நிகழ்ச்சியில் அக்ஷய் குமார் பேசுகையில், தாய்லாந்து கலாச்சாரத்தையும், வாழ்க்கை முறையையும் உலக நாடுகள் பின்பற்றினால், பின் லேடன்களுக்கு இங்கு வேலையே இல்லை. தெருக்களில் இளநீர் விற்க வேண்டியதுதான் என்றார்.

நிகழ்ச்சியில், ஜூலை மாதம் ரிலீஸாகப் போகிற மிஷன் இஸ்தான்புல், லவ் ஸ்டோரி 2050, தே தலி, ஆசிட் பேக்டரி ஆகிய படங்களிலிருந்து சில காட்சிகள் காட்டப்பட்டன.

விருதுப் பட்டியல்

சிறந்த நடிகர் - ஷாருக் கான் (சக் தே இந்தியா).
சிறந்த நடிகை- - கரீனா கபூர் (ஜப் வி மெட்).
சிறந்த இயக்குநர் - ஷிமித் அமீன் (சக் தே இந்தியா).
சிறந்த கதை - ஜெய்தீப் சஹானி (சக் தே இந்தியா).
சிறந்த இசையமைப்பாளர் - ஏ.ஆர்.ரஹ்மான் (குரு)
சிறந்த பின்னணி இசை - ஏ.ஆர். ரஹ்மான் (குரு)
சிறந்த பாடலாசிரியர் - ஜாவேத் அக்தர் (ஓம் சாந்தி ஓம்)
(சிறந்த மேக்கப், ஸ்பெஷல் எபக்ட்ஸ், பாடல் ஒலிப்பதிவுக்கான விருதுகளையும் ஓம் சாந்தி ஓம் பெற்றது)

சிறந்த குணச்சித்திர நடிகர் - இர்பான் கான்.
சிறந்த குணச்சித்திர நடிகை - கொங்கனாசென் சர்மா.
சிறந்த காமெடியன் - கோவிந்தா (பார்ட்னர்)
சிறந்த வில்லன் - விவேக் ஓபராய் (ஷூட்டவுட் அட் லோகந்த்வாலா)
சிறந்த பின்னணிப் பாடகி - ஷ்ரேயா கோஷல் (குரு)
சிறந்த பின்னணிப் பாடகர் - ஷான் (சாவரியா)

வாழ்நாள் சாதனையாளர் விருது - மும்தாஜ், ஷியாம் பெனகல்.
ஸ்டைல் ஐகான் நடிகர் - அபிஷேக் பச்சன்.
ஸ்டைல் ஐகான் நடிகை - காத்ரீனா கைப்.
சிறந்த புதுமுக நடிகை - தீபிகா.
சிறந்த புதுமுக நடிகர் - ரன்பீர் சிங்.

இந்தியா சர்வதேச திரைப்பட அகாடமி என்று இந்த அமைப்புக்கு பெயர் இருந்தாலும், இந்திப் படங்களுக்கு மட்டுமே இங்கு இடமுண்டு. இந்தியாவின் மிகப் பெரிய திரையுலகும், எண்ணற்ற உலகத் தரம் வாய்ந்த நடிகர், நடிகையர், டெக்னீஷியன்கள் பரவிக் கிடக்கும் தென்னிந்தியத் திரையுலகை இந்த 'ஐஐஎஃப்ஏ' திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X