சிறந்த நடிகை குஷ்பு - நடிகர் அபிஷேக் - தொடர் செல்வி

By Staff

Kushboo
சென்னை: சிறந்த சின்னத்திரை நடிகையாக குஷ்புவும், நடிகராக அபிஷேக்கும், சிறந்த தொடராக செல்வியும் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழக முதல்வர் கருணாநிதி இந்த விருதுகளை வழங்கினார்.

சிறந்த மெகாத் தொடருக்கான முதல் பரிசு ராடன் நிறுவனத்தின் செல்விக்கு கிடைத்தது. அதனை ராதிகா சரத்குமார் பெற்றுக்கொண்டார். அவருக்கு ரூ.2 லட்சம் ரொக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

சிறந்த மெகாத் தொடருக்கான இரண்டாம் பரிசு ஏ.வி.எம்.மின் சொர்க்கம் தொடருக்கு வழங்கப்பட்டது. ஏவி.எம்.சரவணன் இப்பரிசை பெற்றுக் கொண்டார்.

சிறந்த வாரத் தொடருக்கான விருதை விகடன் டெலி விஸ்டாஸ் அல்லி ராஜ்யமும், ஆண்டின் சிறந்த சாதனையாளர் விருது கோலங்கள் திருச்செல்வத்திற்கும், ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் விருது ராணி சோமநாதனுக்கும் வழங்கப்பட்டது. இவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் ரொக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

பரிசு பெற்றவர்கள் விவரம்

சிறந்த கதாநாயகன் - மலர்கள் தொடரில் நடித்த அபிஷேக்

சிறந்த கதாநாயகி - கல்கி தொடரில் நடித்த குஷ்பு,

சிறந்த குணச்சித்திர நடிகர் - ஆனந்தம் தொடரில் நடித்த டெல்லிகுமார்

சிறந்த குணச்சித்திர நடிகை - சொர்க்கம் தொடரில் நடித்த தேவிப் பிரியா.

சிறந்த வில்லன் நடிகர் - கோலங்கள் தொடரில் நடித்த அஜய்,

சிறந்த வில்லி நடிகை - ஆனந்தம் தொடரில் நடித்த பிருந்தா தாஸ்,

சிறந்த குழந்தை நட்சத்திரம் - 'மைடியர் பூதம்' மாஸ்டர் பரத்.


சிறந்த இயக்குனர் - செல்வி தொடரை இயக்கிய சமுத்திரக்கனி

சிறந்த கதாசிரியர் - ஆனந்தம் தேவிபாலா,

சிறந்த திரைக்கதை ஆசிரியர் - செல்வி ராஜ்பிரபு,

சிறந்த உரையாடல் ஆசிரியர் - அகல்யா குமரேசன்,

சிறந்த ஒளிப்பதிவாளர் - மலர்கள் மாடசாமி,

சிறந்த படத்தொகுப்பாளர் - லட்சுமி பிரேம்,

சிறந்த பின்னணி இசையமைப்பாளர் - கிரண் (பல தொடர்கள்),

சிறந்த பின்னணி குரல் - ரவிசங்கர் (ஆண்), பிரமிளா (பெண்),

சிறந்த தந்திரக் காட்சியாளர் - சிந்துபாத் தொடருக்காக ஈஸ்வர்.

அனைவருக்கும் தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X