'தி கிங் ஸ்பீச்' நடிகருக்கு கிரீன் பீல்ட் விருது!

உலக அளவில் சிறந்த படங்களுக்கு வழங்கப்படும் ஆஸ்கார் விருது வழங்கும் விழா வருகிற 23-ந்தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கிறது. இதில், தி கிங்ஸ் ஸ்பீச் என்ற ஆங்கில படம் 12 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 17-வது ஆண்டு ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்டு விருது வழங்கும் விழா லாஸ்ஏஞ்செல்ஸ் நகரில் நடந்தது. இதுவும் பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.
இதில் தி கிங்ஸ் ஸ்பீச் படத்தில் 6-வது ஜார்ஜ் மன்னராக நடித்த காலின்பிர்த்துக்கு ஸ்கிரீன்ஸ் ஆக்டர்ஸ் கில்டு விருது கிடைத்தது. இவை தவிர சிறந்த படத்துக்கான விருதும் இப்படத்துக்கு வழங்கப்பட்டது. இந்த விருது ஆஸ்கார் விருதுக்கு இணையாக கருதப்படுகிறது.
இப்படம் ஏற்கனவே ஹாலிவுட் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் விருதையும் பெற்றுள்ளது. சிறந்த நடிகைக்கான விருது நடாலி போர்மானுக்கு கிடைத்தது.
பிளாக் ஸ்வான் என்ற படத்தில் நடித்ததற்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











