அமீர்கானுக்கு மங்கேஷ்கர் விருது

By Staff

Aamir Khan
நடிகர் அமீர்கானுக்கு தினாநாத் மங்கேஷ்கர் விருது வழங்கப்படுவதாக மங்கேஷ்கர் அறக்கட்டளை அறிவித்துள்ளது.

ஏப்ரல் 24ம் தேதி மும்பையில் நடைபெறும் தினாநாத் மங்கேஷ்கரின் 66வது நினைவு தினத்தின்போது அமீர்கானுக்கு, பாடகி லதா மங்கேஷ்கர் விருதினை வழங்கி கெளரவிப்பார்.

இதுகுறித்து அறக்கட்டளை தலைவர் ஹிருதயநாத் மங்கேஷ்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தனது படங்களில் பல்வேறு பரீட்சார்த்த முயற்சிளை செய்வதில் வல்லவர் அமீர்கான். படத் தயாரிப்பிலும், தற்போது இயக்குநராகவும் அவர் சாதனை படைத்துள்ளார் என்றார். ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் சான்றிதழைக் கொண்டது மங்கேஷ்கர் விருது.

இதே விழாவில் திரைப்படம் மற்றும் நாடகத் துறையில் சாதனை படைத்தவரான டாக்டர் ஸ்ரீராம் லகூவும் பாராட்டப்பட்டு விருது அளிக்கப்படவுள்ளார்.

மேலும் கிளாசிகல் இசையில் சிறந்து விளங்கும் மாலினி ராஜுர்கர், மராத்தி நாடகக் கலைஞரான மோகன் டோன்ட்வல்கர் ஆகியோருக்கும் அவரவர் துறையில் சாதனை படைத்ததற்காக விருது வழங்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X