நயன்தாராவுக்கு ஏசியாநெட் விருது... விஜய் வழங்கினார்!

By Chakra

மலையாளத்தில் வெளியான பாடிகார்ட் படத்தில் சிறப்பாக நடித்த நயன்தாராவுக்கு சிறந்த நடிகை விருது வழங்கியது ஏசியாநெட் நிறுவனம்.

மலையாளத்தில் பிரபல சேனலான ஏசியாநெட், ஆண்டுதோறும் திரைப்பட விருதுகளை வழங்கி வருகிறது.

இந்த ஆண்டு விருது வழங்கும் விழா கொச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அமிதாப் பச்சன், நடிகர் விஜய் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

பாடிகார்ட் ( தமிழில் விஜய் நடித்துள்ள காவலன்) படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நயன்தாராவுக்கு சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டது. அவருக்கு இந்த விருதினை மேடையில் வழங்கியவர் விஜய்.

விழாவில் நயன்தாரா எதுவும் பேசவில்லை. பேசச் சொன்னபோது, நன்றி என்று மட்டும் கூறி இருக்கைக்குத் திரும்பினார்.

சிறந்த நடிகருக்கான 'பாபுலர் விருது' நடிகர் திலீபுக்கு வழங்கப்பட்டது. இவரும் பாடிகார்ட் படத்தில் நடித்ததற்காக இந்த விருதினைப் பெற்றார்.

இந்த விருது விழாவில் மலையாள முன்னணி நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி உள்பட பலரும் பங்கேற்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X