புதுவை திரை விழா-ராஜசேகரனுக்கு விருது!

By Staff

 Kushboo, Sathyaraj in Periyar
புதுச்சேரி: புதுவை அலையன்ஸ் பிரான்சிஸ்சில் நாளை 23-வது இந்திய திரைப்பட விழா தொடங்குகிறது. இவ்விழாவில் பெரியார் பட இயக்குநர் ஞான ராஜசேகரனுக்கு விருது வழங்கப்படுகிறது.

இதையொட்டி தினந்தோறும் மாலை 6.15 மணிக்கு அலையன்ஸ் பிரான்சிஸ் திரையரங்கில் சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

16ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில், 12ம் தேதி பெரியார் தமிழ் திரைப்படமும், 13ம் தேதி கதபறையும் போள் மலையாள திரைப்படமும், 14ம் தேதி தர்ம் இந்தி திரைப்படமும், 15ம் தேதி அனுரானம் பெங்காலி திரைப்படமும், 16ம் தேதி அம்முவாகிய நான் தமிழ் திரைப்படமும் திரையிடப்படுகிறது. திரைப்படங்களைக் காண ரசிகர்களுக்கு அனுமதி இலவசம்.

புதுவை அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறையும், நவதர்சன் திரைப்பட கழகமும் இணைந்து 2008ம் ஆண்டின் சிறந்த திரைப்படமாக பெரியார்' திரைப்படத்தை தேர்ந்தெடுத்துள்ளது.

இந்த திரைப்படத்தை இயக்கிய ஞான. ராஜசேகரனுக்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருது வழங்கப்பட உள்ளது. திரைப்பட விழாவில் முதல்-அமைச்சர் வைத்திலிங்கம் இந்த விருதை ஞான ராஞசேகரனுக்கு வழங்குகிறார்.

விழாவில் எஸ்.பி. சிவக்குமார் எம்.எல்.ஏ., புதுவை நகராட்சி தலைவி டாக்டர் ஸ்ரீதேவி, நவதர்சன் திரைப்பட கழக தலைவி சாயிகுமாரி, அலையன்ஸ் பிரான்சிஸ் தலைவர் டாக்டர் நல்லாம், கவுன்சிலர் இந்திரா சோமானி ஆகியோர் பங்கேற்றுப் பேசுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X