சரோஜாதேவிக்கு என்டிஆர் விருது!

By Sudha

Saroja Devi
கன்னடத்துப் பைங்கிளி என அந்தக் காலத்து ரசிகர்களால் சிலாகிக்கப்பட்ட நடிகை சரோஜாதேவிக்கு, ஆந்திர அரசின் என்டிஆர் விருது கிடைத்துள்ளது.

கர்நாடகத்தைச் சேர்ந்தவரான சரோஜாதேவி, தமிழில்தான் மிகப் பெரிய புகழைப் பெற்றவர். தங்களில் ஒருவராகவே சரோஜாதேவியை தமிழ் திரை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டனர் அந்தக் காலத்தில். அதை சரோஜாதேவியும் மறக்கவில்லை.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என ஐந்து மொழிகளில் 170 படங்களுக்கும் மேலாக நடித்துள்ள சரோஜாதேவி பல விருதுகளையும் வாங்கிக் குவித்தவர். இந்த நிலையில் தற்போது அவரைத் தேடி இன்னொரு விருது ஆந்திராவிலிருந்து வந்துள்ளது.

2009ம் ஆண்டுக்கான என்டிஆர் தேசிய திரைப்பட விருது சரோஜாதேவிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னட நடிகையான சரோஜாதேவி தமிழில் தனது முதல் படத்தில் எம்.ஜி.ஆருடன் நாடோடிமன்னன் படத்தில் அறிமுகமானார். அதேபோல தெலுங்கில் அவர் அறிமுகமான முதல் படத்தின் ஹீரோ என்.டி.ஆர். என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X