லதா மங்கேஷ்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

லதா மங்கேஷ்கரும், ஆஷா போன்ஸ்லேயும் நீண்ட வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் மேடையில் தோன்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இசைத் துறையில் சிறந்து விளங்கிய 21 பேருக்கு இந்த விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் அனில்கபூர் கூறியதாவது,
"பிரபலங்களை கவுரவிக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. நிகழ்ச்சியில் பங்கேற்பது ஊக்கம் அளிக்கிறது. இதில் ஆர்வமுடன் கலந்துகொண்டேன்", என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறுகையில், "எனது தந்தை தினமும் லதா மங்கேஷ்கரின் புகைப்படத்தைப் பார்த்துவிட்டுத்தான் கம்போஸிங்கைத் தொடங்குவார். இன்று லதா மங்கேஷ்கருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பது பெருமையாக உள்ளது," என்றார்.
Comments
asha bonsle ஆஷா போன்ஸ்லே ரஹ்மான் லதா மங்கேஷ்கர் வாழ்நாள் சாதனையாளர் விருது latha mangeshkar lifetime achievement award rahman


Click it and Unblock the Notifications