twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லதா மங்கேஷ்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

    By Sudha
    |

    Latha Mangeshkar
    பிரபல திரைப்பட பின்னணி பாடகி லதா மங்கேஷ்வருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் இந்த விருதினை, லதா மங்கேஷ்வர் தங்கை ஆஷா போன்ஸ்லே மற்றும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் ஆகியோர் வழங்கினார்.

    லதா மங்கேஷ்கரும், ஆஷா போன்ஸ்லேயும் நீண்ட வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் மேடையில் தோன்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இசைத் துறையில் சிறந்து விளங்கிய 21 பேருக்கு இந்த விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் அனில்கபூர் கூறியதாவது,

    "பிரபலங்களை கவுரவிக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. நிகழ்ச்சியில் பங்கேற்பது ஊக்கம் அளிக்கிறது. இதில் ஆர்வமுடன் கலந்துகொண்டேன்", என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறுகையில், "எனது தந்தை தினமும் லதா மங்கேஷ்கரின் புகைப்படத்தைப் பார்த்துவிட்டுத்தான் கம்போஸிங்கைத் தொடங்குவார். இன்று லதா மங்கேஷ்கருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பது பெருமையாக உள்ளது," என்றார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X