விஜய் திரைப்பட விருதுகள்

By Staff

Vijay TV Program
விஜய் டிவி வழங்கும் 2008ம் ஆண்டுக்கான ரிலையன்ஸ் விஜய் திரைப்பட விருதுகளை தேர்வு செய்யும் நேயர் வாக்கெடுப்பு தொடங்கியுள்ளது.

2007ம் ஆண்டுக்கான ரிலையன்ஸ் மொபைல் விஜய் விருது வழங்கும் விழா சென்னையில் வெற்றிகரமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில், கமல்ஹாசன், விக்ரம், விஜய், திரிஷா, ஷ்ரியா உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் 2008ம் ஆண்டுக்கான விருதுகளை பெறுவோரை தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.

முதல் கட்டமாக ஒரு நடமாடும் வேன் தமிழகம் முழுவதும் 2 வார காலத்திற்கு சுற்றுப்பயணம் செய்யும். இந்த வேனுக்கு ரசிகன் எக்ஸ்பிரஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர், திரைப்படம் உள்ளிட்டவற்றை நேயர்கள் வாக்களித்து தேர்வு செய்வார்கள்.

சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி, தஞ்சை, ஈரோடு ஆகிய நகரங்களில் இந்த வேன் பயணிக்கும்.

நடிகர், நடிகை என நான்கு பிரிவிலும் தலா நான்கு பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருக்கும். அதிலிருந்து ஒருவரை நேயர்கள் தேர்வு செய்ய வேண்டும்.

வேன் தவிர எஸ்.எம்.எஸ்., இன்டர்நெட் உள்ளிட்டவற்றின் மூலமும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளலாம்.

இந்த நான்கு முக்கிய விருதுகளைத் தவிர 22 பிற விருதுகள், நான்கு சிறப்பு விருதுகளை நடுவர்கள் தேர்வு செய்வர்.

செவாலியர் சிவாஜி கணேன் விருது, சிறந்த திரைப்பட பங்களிப்புக்கான விருது, சிறந்த பொழுதுபோக்காளர் விருது, சிறந்த ஐகான் விருது ஆகியவை சிறப்பு விருதுகளாகும்.

விருது வழங்கும் விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெறும். பல்வேறு முன்னணிக் கலைஞர்கள் கலந்து கொள்ளும் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

விழாவினை திரைப்பட திறனாய்வாளரும், நடிகருமான யூகி சேதுவும், நடிகை குஷ்புவும் தொகுத்து வழங்குவார்கள்.

நடுவர் குழுவில் இயக்குநர் பாக்யராஜ், விமர்சகர் மதன், நடிகை லிஸி பிரியதர்ஷன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

விஜய் விருதுகள் குறித்த முன்னோட்டம் வாரம் ஒருமுறை விஜய் டிவியில் ஒளிபரப்பாகும். ரசிகன் எக்ஸ்பிரஸின் பயணம் குறித்தும் தொடர்ந்து ஒளிபரப்பாகும்.

மார்ச் கடைசி வாரத்தில் இந்த நிகழ்ச்சியை விஜய் டிவியில் பார்க்கலாம். மார்ச் 19ம் தேதி ரசிகன் எக்ஸ்பிரஸின் பயணம் தொடங்குகிறது.

ரசிகன் எக்ஸ்பிரஸ் தொடக்க விழாவில் அமைச்சர் பரிதி இளம்வழுதி, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் கவுன்சில் தலைவர் ராம.நாராயணன், இயக்குநர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத் தலைவர் பெப்சி விஜயன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X