சிறந்த படம் - 12 இயர்ஸ் ஸ்லேவ், சிறந்த நடிகர் - மேத்யூ மெக்கனாஹே, நடிகை- கேட் ப்ளாஞ்செட்!
லாஸ் ஏஞ்செல்ஸ்: 12 இயர்ஸ் ஸ்லேவ்-க்கு சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த நடிகராக மேத்யூ மெக்கனாஹேவும், சிறந்த நடிகையாக கேட் ப்ளாஞ்செட்டும் விருது வென்றனர்.
86வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடந்தது.
இந்த ஆண்டு அதிக விருதுகளை தி கிரேவிட்டி படம் தட்டிச் சென்றது. சிறந்த இயக்குநர் உள்பட 7 விருதுகளை அந்தப் படம் வென்றது.

சிறந்த படம்
2013-ம் ஆண்டின் சிறந்த படத்துக்கான விருதினை 12 இயர்ஸ் ஸ்லேவ் படம் வென்றது. கடைசி நிமிடம் வரையில் சிறந்த படத்துக்கான விருது கிரேவிட்டிக்கா, 12 இயர்ஸ் ஸ்லேவுக்கா என்பதில் கடும் போட்டி நிலவியது.
ஸ்டீவ் மெக்குயீன் இயக்கிய இந்தப் படம் ஏற்கெனவே கோல்டன் குளோப் விருது வென்றது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் நடிகர் பிராட் பிட்டும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த நடிகர்
சிறந்த நடிகருக்கான விருது டல்லஸ் பையர்ஸ் க்ளப் படத்திலர் நடித்ததற்காக மேத்யூ மெக்கனாஹேவுக்குக் கிடைத்தது.

சிறந்த நடிகை
சிறந்த நடிகையாக கேட் ப்ளாஞ்செட் தேர்வு செய்யப்பட்டார். ப்ளூ ஜாஸ்மின் படத்துக்காக இந்த விருதினை அவர் வென்றார்.

சிறந்த இசை - பாடல்
சிறந்த ஒரிஜினல் இசைக்கான விருது கிரேவிட்டி படத்துக்குக் கிடைத்தது. சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருது ப்ரோசன் படத்தில் இடம்பெற்ற லெட் இட் கோ பாடலுக்கு தரப்பட்டது.

குறும்படங்கள்
சிறந்த அனிமேஷன் குறும்படத்துக்கான விருது மிஸ்டர் ஹப்ளாப் படத்துக்கும், சிறந்த ஆக்ஷன் குறும்பட விருது ஹீலியம் படத்துக்கும் வழங்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











